Browsing: Doctor

சிவகார்த்தியின் சேட்டை செல்லம்மா

சிவகார்த்திகேயன் ஹீரோ’ திரைப்படத்தை தொடர்ந்து நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ ஜூலை 16இரவு வெளியானது. வித்தியாசமான அறிவிப்புடன் வெளியான இந்தப் பாடல் வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். பாடல் துவங்குவதற்கு முன்னதாக ‘எந்த மாதிரி பாடல் வேண்டும்’ என அனிருத் கேட்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன் ‘வேற லெலவில் ஹிட் ஆகணும் சார். டிக்…

மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது இப்படத்தில் காதோடு என்ற பாடலை தனுஷ், அதிதி ராவ் பாடி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இப்பாடல் விரையில் வெளியாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதுபோல், சூர்யா நடிப்பில்…

சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மற்ற மாவட்டங்களை விட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் சக ஊழியர்கள், நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், மருத்துவமனையை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல அதிகரித்து வருகின்றன. மருத்துவர்கள், காவல்துறையினர் தங்கள் குடும்பங்களை மறந்து கொரோனா பாதித்தவர்களை மீட்கவும், கொரோனாவை கட்டுப்படுத்தவும் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் கொரோனா ஏற்படும் ஆபத்து உள்ளதால் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்…