Browsing: doctors

‘டாக்டர்’ படத்தைத் தட்டி தூக்கிய ஓடிடி நிறுவனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. மலையாள நடிகை பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன. எனவே டாக்டர் படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு…

மருத்துவர்கள், செவிலியர்கள் என்று அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் – விஜயபாஸ்கர்

மருத்துவர்கள், செவிலியர்கள் என்று அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரையில் இதுவரை 4,534 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மதுரையில் மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை மிஞ்சி இந்தியா 7வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் இதுவரை 1,90,609 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 223 பேர் உட்பட மொத்தம் 5,408 பேர் கொரோனாவுக்கு உயிரை பறிகொடுத்துள்ளனர். அதே நேரத்தில் 91,852 பேர் சிகிச்சைக்கு பின், முழுமையாக உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 67,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தில்…

அண்டை மாநிலங்கள் என்ஜிஓக்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்களின் உதவியை நாடி உள்ளன: கமல்ஹாசன்

கொரோனாவை தடுக்க அண்டை மாநிலங்கள் என்ஜிஓக்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்களின் உதவியை நாடி உள்ளதாக மக்கள் நிதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் துர்தஷ்டவசமாக தமிழக அரசு உதவ ஆர்வமுள்ளவர்களை தடுத்து உத்தரவிட்டுள்ளது.