Browsing: Dr. Arokyaraj

கொரிய தமிழ்ச் சங்க விழாவுக்கு இந்தியத்தூதர் அனுப்பிய வாழ்த்து செய்தி

சியோல், தென்கொரியா, திருவள்ளுவர் ஆண்டு 2052, தைத்திங்கள் 18-ம் நாள் ஞாயிறன்று (31 சனவரி 2021) தமிழர் திருநாள் – 2021 இணையவழி இயங்கலையில் நடைபெற்ற கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீபிரியா ரெங்கநாதன் அவர்கள் தமிழில் வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். நிகழ்வு வெற்றிபெற வாழ்த்து தெரிவித்த அவர், கொரியாவில் நடைபெறும் பொங்கல் நிகழ்வு தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொரிய மக்களிடையே எடுத்துச்செல்லும் பலமாக அமைகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.…

கொரோனா காலத்திலும் கொரியாவை கலக்கிய தமிழர்!

உலக மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் புரட்டிப் போட்ட கொடூரமான வைரஸாக கொரோனா இருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் கிடைத்த தனிமையை பயன்படுத்தி தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் தென்கொரியாவில் ஆராய்ச்சி பேராசிரியராக பணிபுரியும் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜை பற்றி சொல்லியே ஆகவேண்டும். கொரியா தமிழ்ச்சங்கம் வழியாக எனக்கு அறிமுகமானவர் நண்பர் ஆரோக்கியராஜ். தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள ஸெஜோங் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், தென்கொரியாவைச் சேர்ந்த யூடியூபரான லஸோல் என்பவரின் உதவியோடு கொரியா தமிழ்…

பெண்களே ஒருங்கிணைத்த கொரியா தமிழ்ச்சங்க இணையவழி கலை இலக்கிய விழா – 2020

கொரியா தமிழ்ச்சங்கத்தின் கலை இலக்கிய விழா – 2020ஐ இணைய வழி கூடுதலாக சங்கத்தைச் சேர்ந்த பெண்களே ஒருங்கிணைத்து நடத்தினார்கள். இந்த விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக செல்வன் கவின் பாரதிராஜாவும் சர்வேஷ் பாரதிராஜாவும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார்கள். நிகழ்வின் நோக்கம் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து முனைவர் சத்யா மோகன்தாஸ் விளக்கம் அளித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் ஆசான் குழந்தைகள் நேயப்பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆசானை அறிமுகம் செய்து சரண்யா…

கொரியா தமிழக உறவுகளுக்கு இலக்கிய – அறிவியல் சான்றுகளுடன் உலகத் தமிழ்ச்சங்க கருத்தரங்கில் முனைவர் ஆரோக்கியராஜ் பேச்சு!

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் கொரியத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் ‘கொரியத் தமிழரும் தமிழும்’ இணையவழி ஆய்வரங்கத்தின் நான்காவது நாளில் ‘கொரியாவில் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்’ குறித்து கொரியத் தமிழ்ச் சங்கத்தின் ஆளுமைப்பிரிவின் இணைச்செயலர் முனைவர் செ.ஆரோக்கியராஜ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது… நான் வேலைக்காக கொரியா வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. பேராசிரியராக பணிபுரிந்தாலும், கொரியாவின் கிராமப்புறங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டினேன். எனது கொரியா பேராசிரியரும் எனக்கு உதவிசெய்தார். அப்போதுதான் கொரியா மொழியில்…

சாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது! கொரியா தமிழ் சங்க கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேச்சு

மனிதன் புலம்பெயர்வதும், தங்கிய இடத்தில் தனது மிச்சங்களை விட்டுச் செல்வதும் மனிதகுல வரலாறு நெடுகிலும் காணக்கிடக்கிறது. எல்லைகளைத் தாண்டி மனிதன் பரவி வாழ்ந்தான். பல்வேறு காரணங்களுக்காக அவன் உலகின் பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கிறான். ஆனால், மொழியால், சாதியால், மதத்தால் தங்களை வேறுபடுத்தி, தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைப்பதுதான் ஆபத்தாக முடிகிறது. மனிதன் கண்டுபிடித்த கோட்பாடுகளில் ஜனநாயகம்தான் உயர்ந்த கோட்பாடு என்று தொல்.திருமாவளவன் பேசினார். கொரியா தமிழ்ச்சங்கமும், தென்புலத்தாரும் இணைந்து நடத்திய கொரியா தமிழ் உறவுகள் ஒரு…

கொரியா – தமிழ் உறவு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரியா தமிழ்சங்கம் நன்றி!

கொரிய தமிழ்ச் சங்கம் மற்றும் தென்புலத்தார் அமைப்பும் இணைந்து நடத்திய “பண்டைய தமிழகம் மற்றும் கொரியா இடையேயான தொடர்புகள் ஓர் பார்வை” எனும் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்த அரசியல் ஆளுமைகள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், ஊடகதுறையினர் மற்றும் அறிவியலாளர்கள் அனைவருக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. நிகழ்ச்சியினை அழகாக திட்டமிட்டு திறம்பட வழிநடத்திய நிகழ்ச்சியின் முதன்மைப் பொறுப்பாளர்கள், இணைச்செயலாளர் முனைவர். ஆரோக்கியராஜ், தொழிநுட்பத்துறை முதன்மைப் பொறுப்பாளர் பொறியாளர். சகாய…

தனிமனிதனாய் உயர்கல்வி வாய்ப்புப் பெற்றுத்தரும் அசத்தல் ஆரோக்கியராஜ்!

சில அமைப்புகளே செய்ய முடியாத உதவிகளை தனது நல்லெண்ணத்தால் சாதித்துக் காட்டியிருக்கிறார் தென்கொரியாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் டாக்டர் பேராசிரியர் ஆரோக்கியராஜ். தமிழக அரசின் கல்வித் திட்டத்தில் பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தென்கொரியாவில் பணிபுரியும் ஆரோக்கியராஜ், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தை சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் முதல்தலைமுறை பட்டதாரிகள் 8 பேருக்கு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார். இப்போது அவர்கள் அனைவரும் நல்ல பணிகளில் இருக்கிறார்கள். இதுகுறித்து அவரிடம் புதியமுகம் இணையதளத்துக்காக பேட்டி கண்டோம். அப்போது அவர்…