Browsing: Duraimurugan

சில பார்ப்பன பொய்களின் பின்னணியில் உள்ள நிஜங்கள்!

சட்டசபையில் பலர் முன்னிலையில் தன் சேலையைக் கிழித்து, மானப்பங்கப்படுத்தினார் துரைமுருகன் என கண்ணீர் மல்க தலைவிரிக் கோலத்துடன் பேட்டி கொடுத்தார் ஜெயலலிதா! அதை அவர் புகாராகவும் கொடுக்கவில்லை, அந்த பேட்டிக்கெதிராக துரைமுருகன் அவதூறு வழக்கும் தொடுக்கவில்லை. எனில் ஜெயலலிதா சொன்னதுதான் உண்மையா? அப்படியிருந்திருந்தால் அதன் பின் அசுரபலத்துடன் ஆட்சிக்கு வந்த ஜெயாவால், துரைமுருகனை பழி தீர்த்திருக்க முடியாதா? அல்லது துரைமுருகனால்? பெண் என்பதால் அதை ஓர் ஆயுதமாக ஜெயலலிதா உபயோகித்துக் கொண்டார். அதைவைத்து எதிரியை வீழ்த்தியதும் அதை…

சித்தர் கட்டுப்பாட்டில் திமுக பொதுசெயலாளர்

திமுக பொதுச் செயலாளரான துரைமுருகனுக்கு திமுகவில் இருந்தும் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தும்வாழ்த்துகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனதும் தேடிச் சென்று, வாழ்த்தும் ஆசியும் பெற்றது ஒரு சித்தரிடம். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே குளிப்பதால் பார்ப்பதற்கு வடநாட்டு அகோரி போலவே இருக்கும் அந்த சித்தரைத் தேடி தன் மகன் கதிர் ஆனந்தோடு செப்டம்பர் 17 இரவு சென்றிருக்கிறார் துரைமுருகன். ‘அய்யா… நீங்க சொன்னதைப் போலவே என் பையனும் டெல்லிக்கு ஜெயிச்சு போயிட்டான். நானும்…

திமுக அதிருப்தியாளர்களை அரவணைக்கும் முயற்சியில் திமுக

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அதற்கான பணிகளை திமுக முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திமுகவிலிருந்து விலகிச் சென்றவர்கள், அதிருப்தி காரணமாக ஒதுங்கியிருப்பவர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டு வர வேண்டுமென முடிவு செய்யப்பட்டு, அதற்கான பொறுப்பை தலைமைக் கழக முதன்மைச் செயலாளரான நேருவிடம் ஒப்படைத்துள்ளது திமுக தலைமை. இதனையடுத்து, தனது பணிகளை உடனடியாகத் துவங்கிய நேரு, முதல்கட்டமாக ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தனிடம்…

திமுக பொதுசெயலாளராக துரைமுருகன் வெளியிட்ட முதல் அறிவிப்பு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக நா.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, துணைப் பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து, புதிய மாவட்டச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (செப்டம்பர் 18) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருவருக்கு ஒரு பதவி என்கிற அடிப்படையில் தனது மாவட்டச் செயலாளர்…

துரைமுருகன்-அன்புமணி ராமதாஸ் ரகசிய சந்திப்பு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுக பாமக கூட்டணி அமைவதற்கான சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவை பலன் பெறவில்லை. அப்போது திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன் கொடுத்த ஒரு பேட்டியில், ‘எங்களோடு நெடுநாள் பழகியவர்கள் திடீரென வெளியேறலாம். எங்களை நேற்றுவரை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென எங்களோடு சேரலாம்; என்று கூறினார். இது பாமகவை மனதில் வைத்துதான் சொல்லப்பட்டது என்று அப்போதே பேச்சு கிளம்பியது. ஆனால்அப்போது அந்த கூட்டணி சாத்தியப்படவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல அல்லாமல் வரப்…