Browsing: E-pass

தமிழகத்தில் இ -பாஸ் ரத்து ஆகிறது – முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

தமிழகத்தில் இ -பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 7வது கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.ஊரடங்கு விதிகளின்படி, தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள் இ- பாஸ் பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில்…

இபாஸ் தளர்வு நகரங்களை நோக்கி திரும்பும் மக்கள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கும் நோக்கிலும் தான் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, திருமணம், மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே…

தடையின்றி அனைவருக்கும் E பாஸ் இனி கிடைக்கும் – தமிழக முதல்வர்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்கிற நிலை நீடித்து வருகிறது. அத்தியாவசியப் பணிகளுக்குக் கூட இ-பாஸ் பெறுவதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்,டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு இ-பாஸ் மிகவும் எளிமையாக கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மற்ற மாநிலங்களில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்திலும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள்…

சர்ச்சை வளையத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய இ-பாஸ் எழுப்பும் கேள்விகள்

ஜூலை 19 ஆம் தேதி சமூக தளங்களில், ‘லயன் இன் லம்பார்ஹினி’ என்ற அடைமொழியோடு பகிரப்பட்டது அந்த ஒற்றைப் புகைப்படம். லம்பார்ஹினி காரில் ரஜினிகாந்த் முகக் கவசம், சீட் பெல்ட் அணிந்தபடி காரைஓட்டிக் கொண்டிருக்கிறார். ‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாதான் ரஜினி வெளியே வருவார்’ என்ற விமர்சனத்தை உடைப்பதற்காக ரஜினியின் அனுமதியுடனே இந்தப் புகைப்படம் சமூக தளங்களில் வெளியிடப்பட்டது என கூறப்பட்டது மேலும், பண்ணை வீட்டில்ரஜினி நடைபயிற்சி செல்லும் வீடியோவும், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படமும் ரஜினி குடும்பத்தார் மூலம்வெளியானது இதை…

சட்டத்தை கடைபிடிக்காமல் கேளம்பாக்கம் போனாரா ரஜினிகாந்த்

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்து லம்போர்கினி கார் ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படமும், கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இளைய மகள் சவுந்தர்யா, மருமகன் மற்றும் பேரனுடன் இருப்பது போன்ற புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது. அதுபோலவே அப்பகுதியில் ரஜினி வாக்கிங் செல்லும் சில வினாடி வீடியோவும் வெளியானது.மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வரும் ரஜினிகாந்த் செங்கல்பட்டு…