Browsing: earth

மாதிரி விண்கல்லை எடுத்து திரும்பிய ஜப்பான் விண்கலம்

பூமியிலிருந்து சுமார் 30 கோடி கிலோமீட்டர் அப்பால் சென்று கொண்டிருக்கும் விண்கல்லில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது ஜப்பான் விண்கலம். சூரியனை பூமி சுற்று வருவதை போலவே பல பெரிய விண்கற்களும் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றிவரும் விண்கற்களில் பூமிக்கு மிக அருகே ரியுகு சென்ற விண்கல் தாண்டி சென்றது. சூரிய குடும்பத்தை தாண்டி சென்று வரும் அந்த விண்கல் மூலமாக விண்வெளி குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்பதால் ரியுகுவை…

பூமியின் வரைபடம் மாறிய கதை

பூமியின் வரைபடம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி மாறியது என்பதை அறியும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. துவக்க கால பூமி, இடைக்கால பூமி, சமீபத்திய பூமி என்று மூன்று காலகட்டங்களாக பிரித்துப் பார்க்கலாம். பூமியின் இடைக்காலத்தை மீஸோஜோயிக் (ஆநளடிணடிiஉ) என்று அழைக்கிறார்கள். பதினெட்டரை கோடி ஆண்டுகளில் இருந்து ஆறரைக் கோடி ஆண்டுகள் வரை இந்த காலகட்டத்தை பிரிக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் பூமியின் நிலப்பகுதி இரண்டு மிகப்பெரிய ‘சூப்பர்’ கண்டங்களாக பிரிந்து கிடந்தன. தெற்கேயிருந்த நிலப்பகுதி கோண்ட்வானா கண்டம் என அழைக்கப்பட்டது.…

உயிர்கள் வாழும் அழகிய பூமி

சூரியனிலிருந்து மூன்றாவதாக சுற்றுகிறது பூமி கோள். வெள்ளி கோளிற்கும் செவ்வாய் கோளிற்கும் இடையில் பூமியின் சுற்றுப்பாதை அமைந்துள்ளது. பூமியை ஒரே ஒரு நிலவு சுற்றுகிறது. பூமிக்கு மட்டும்தான் ரோமானியர்களின் பெயர் இல்லை. எர்த் என்ற பெயர் பழைய ஆங்கிலச் சொல். ஆனாலும் கூட பூமியை டெர்ரா என ரோமானியர்கள் அழைத்தனர். 12 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் பெரும் பகுதி நிலப்பரப்புகள் ஒன்றாக இணைந்திருந்தன. அதை பான்ஜியா என்று அழைக்கின்றனர். சூரியனிலிருந்து 14 கோடியே 96 லட்சம்…

‘பெர்சவரன்ஸ்’ விண் ஊர்தி நேற்று தனது பயணத்தை தொடங்கியது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய் கோள் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக ‘பெர்சவரன்ஸ்’ விண் ஊர்தி நேற்று (ஜூலை 30) தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும். ஃபுளோரிடாவின் கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் ஒன்றின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்ணூர்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி…

நீலநிற இதயம்!

விண்வெளியில் இருந்து பார்த்தால் நமது பூமி நீலநிற ரத்தினக்கல் போல ஜொலிக்கும். நமது பூமியை நீல நிறத்தில் மாற்றுவது எது? நான்கில் மூன்று பங்காய் பரந்திருக்கும் கடல்தான். நமது கடலில்தான் முதல் உயிரினம் தோன்றியது. இப்போதும் கணக்கில் அடங்காத அளவுக்கு உயிரினங்கள் கடலில் அடைக்கலமாகி இருக்கின்றன. இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் கடல்வாழ் உயிரினங்களை கணக்கிட்டுள்ளனர். இது மிகவும் குறைவானது. மொத்தத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான கடல்வாழ் உயிரின வகைகள் இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளனர். பூமியின்…