Browsing: edapadi palaniswamy

அரசியல் பேராசையை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தேர்தல் வழக்கு குறித்து பேசிய முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள மு.க.ஸ்டாலின், “எனது கொளத்தூர் தேர்தல் வழக்கு பற்றி முதல்வர் பேசியது அவர் விரக்தியில் இருப்பதை காட்டுகிறது. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஒரு வழக்கை மேற்கொள்காட்டி முதல்வர் பேசியது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீடு பற்றி தீர்ப்பு வழங்குவது போல் முதல்வர் பேசியுள்ளார். என்னாலும் நிறைவேறவே முடியாத தன் அரசியல் பேராசையை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று…

14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்

கொரோனாவின் தாக்கத்தைப் பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தாக்கிய இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 7,ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10 ஆயிரத்து 55 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.…

விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் முதல்வர் எடப்பாடி- மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டத்தை ஆதரித்ததற்காக விவசாயிகளிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்றுமாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேறியதாக அறிவித்தார் துணைத் தலைவர் ஹரிவன்ஸ். முன்னதாக  இந்தச் சட்டத்தை ஆதரித்து நீீீீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதில், தமிழக விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் வகையில் வேளாண்திட்டங்கள் உள்ளன.…

புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

புதிய கல்வி கொள்கை 2020 தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்களுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல்

திருவள்ளூரில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார. முன்னதாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அவர் அடிக்கல் நாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காவலர்களும் மனிதர்கள் தானே, மக்கள் மனசாட்சியோடு நடந்துக்கொள்ளுங்கள் என ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மக்கள் அனைவரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பிவிடும் என்ற…

பிரதமர் மோடி காணொளி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோன தடுப்பு பணிகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனையில் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளை…

தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் கடைகளில் நாளை முதல் 1000 விநியோகம்

சென்னை: தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் நாளை முதல் 1000 மற்றும் ஒரு மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வருகிற 15ம் தேதி காலை 6 மணி வரை 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…