Browsing: Edappadi Palanichamy

முதல்வர் தயார் மறைவு

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் இன்று நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முதல்வர் தாயாரின் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சர்…

10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு தொழில்நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்து வருகிறார். கொரோனா காலத்திலும் கூட தமிழகத்தில் நிறுவனங்கள் முதலீடு செய்ய வழிவகை செய்து வருகிறார். ஆகவே, கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் முதலீடுகளைப் பெற்ற மாநிலமாகத் தமிழகம் உள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் தொழில் தொடங்க 42 புதிய நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் 30,664 கோடி…

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சரின் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சரின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாளையுடன் 8-ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

பாகுபலி ஹீரோவான எடப்பாடி கே.பழனிச்சாமி

தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் முதல்வருக்கு ஆதரவாகத் தொடர்ந்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து அரியர் தேர்வுக்காகக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதக் காத்திருந்த மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் 24க்கும் மேற்பட்ட பேப்பர்களில் அரியர் வைத்தவர்களும் தேர்ச்சி பெற்றனர். இது மாணவர்கள்…

அதிகளவு வேலைவாய்ப்புள்ள மாநிலம் தமிழகம் – எடப்பாடி பழனிச்சாமி

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 27) மாலை நடைபெற்ற கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 207.56 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் 43.60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தார். பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர், “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவிலான…