Browsing: edappadi palaniswamy

வழக்கு போட்ட எடப்பாடிக்கு நன்றி சொன்ன ஆ.ராசா

திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2ஜி உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பேட்டியளித்தார். இதற்கு பதிலளித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இதுதொடர்பாக தன்னுடன் விவாதிக்கத் தயாரா என கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பாக சமீபத்தில் நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, ஜெயலலிதாவை சொத்து சேர்த்த கொள்ளைக்காரி என்றும், முதல்வர் பழனிசாமியையும் விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாநில இணை செயலாளர் செல்வகுமார் அளித்த புகாரின்…

முதல்வர் எடப்பாடிபழனிச்சாமிக்கு ஆ.ராஜா பகிரங்க கடிதம் முழுமையாக

சேலத்தில் டிசம்பர்3ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2 ஜி வழக்கில் ஊழல் செய்தது திமுக எனக் குற்றம்சாட்டினார். இதற்கு உடனடியாக பதில் கொடுத்த திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, ஊழல் செய்தது யார்? ஊழல் செய்து தண்டனை பெற்றது யார் என முதல்வருடன் கோட்டையில் விவாதிக்கத் தயாராக இருப்பதாக ஊடகங்கள் மத்தியில் அறிவித்தார் ஆனால் சிபிஐ உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் ராசா தப்பிவிட்டதாக சொன்னார் முதல்வர். மீண்டும் ஆ.ராசா விவாதத்திற்கு…

வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். புரெவி புயல் காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது/இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் ஆகிய நிலையில் 60 ஆயிரத்துக்கு அதிகமான ஹெக்டர் நெற்பயிர்கள் நாசமாகின. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட முதல்வர் பழனிசாமி நேற்று நாகப்பட்டினத்திற்கு சென்றார். நேற்றிரவு வேளாங்கண்ணியில் தங்கிய முதல்வர் இன்று காலை நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகிறார். இந்நிலையில் நாகை…

யார்க்கர் புகழ் நடராஜனுக்கு முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இன்று முதல் முறையாக சர்வதேச ஒருநாள் போட்டியில் கலந்துகொண்டார் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் விளையாடிய இந்த போட்டிகளில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது ஏற்கனவே சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்புராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்…

தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் – முதலமைச்சர் பழனிசாமி

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்த இனிய நாளில், நம் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிட, எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வு அமைந்திட, என் தீப ஒளி…

ஆறு வருடத்திற்கு மு.க.ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியாது

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கரோனா பாதிப்புக்கு ஆளாகி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறான…

முதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளை கொண்டப்படுவதையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியின் வாழ்த்து செய்தியில், “ஆயுத பூஜை, விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்களுக்கு வாழ்த்து. தமிழக மக்கள் எல்லாம் நலன் வளங்களுடன், வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும். மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம், கல்வி ஆகியவை இன்றியமையாதது ” என்று தெரிவித்துள்ளார்.

புதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 119.21 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, ரூ.104 கோடியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் பழனிசாமி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டியிருந்தார். 5 புதிய மாவட்டங்களில் தென்காசிக்கு மட்டும் ஆட்சியர் அலுவலகம் கட்ட இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை…

கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வந்த நிலையில், மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர், மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார். அதே போல, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி வந்தார். இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சென்ற…

தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்திக்கிறார். முதல்வரை சந்தித்து தாயாரின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் நிகழும் இந்த சந்திப்பில், ஸ்டாலின் முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின். தாயாரின் மறைவையொட்டி கடந்த ஒருவார காலமாக சேலம் இல்லத்தில் இருந்த முதல்வர் பழனிசாமி நேற்றிரவு சென்னை திரும்பினார். கடந்த வாரம்…

அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா

அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லம் அருகே அதிமுகவின் கொடியை ஏற்றினார். அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி , அதிமுக கொடியேற்றி சிறப்பித்தார் . சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் பழனிசாமி. தனது தாயார் தவுசாயம்மாள் மறைவால் சொந்த ஊரில் உள்ள…

பள்ளி திறப்பு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் முதற்கட்டமாக 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடுதல் மற்றும் புதிய 108 ஆம்புலன்ஸ் துவக்கி வைக்கும் விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை. வரும் 29ஆம் தேதி முதலமைச்சரை சந்தித்து ஆய்வு நடத்த உள்ளேன். பின்னர் பள்ளிக்கல்வித்துறை, வருவாய் துறை, பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளிடம் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு…