Browsing: edappadi

வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். புரெவி புயல் காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது/இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் ஆகிய நிலையில் 60 ஆயிரத்துக்கு அதிகமான ஹெக்டர் நெற்பயிர்கள் நாசமாகின. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட முதல்வர் பழனிசாமி நேற்று நாகப்பட்டினத்திற்கு சென்றார். நேற்றிரவு வேளாங்கண்ணியில் தங்கிய முதல்வர் இன்று காலை நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகிறார். இந்நிலையில் நாகை…

மு.க. அழகிரியை பிடிக்கத்தான் அமித்ஷா வர்றாரா?

அமித்ஷா 21 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வர்றார் என்றதும் எல்லோரும் பயந்து நடுங்குவதாக பாஜக தலைவராக இருக்கும் முருகன் சொல்லியிருக்கிறார். பாவம், அவருடைய முன்னோர் பாப்பான்களை பார்த்து பயந்து நடுங்கியதை மறந்துட்டு பேசுறார். அவரை விட்டுருவோம். அமித்ஷாவை பார்த்து ஏன் பயப்படனும்? பாம்பைப் பார்த்து பயப்படனும். பேய் பிசாசை பார்த்து பயப்படனும். கொடூரமான விலங்குகளை பார்த்து பயப்படனும். இவரு நம்மைப் போல ஒரு மனுஷன்தானே. இவரைப் பார்த்து ஏன் பயப்படனும். ஓ, மனுஷனை பிடிச்சு சாப்பிடும்…

எடப்பாடிக்கு இருக்கும் துணிச்சல் ஸ்டாலினுக்கு இல்லையா? திமுகவுக்குள் பரவும் அதிருப்தி!

அரசியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தனது கட்சிக்குள் பொறுப்பாளர்களை நியமிப்பதில் பம்முகிறார் என்று திமுகவினர் கருதுகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ, ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி துணிச்சலான முடிவுகளால் அதிமுகவினரை அசத்துகிறார் என்கிறார்கள். மாநிலம் முழுவதும் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனத்திலும் சரி, தொகுதிவாரியாக இருக்கிற சாதி வாக்குகளுக்கு தகுந்தபடி பொறுப்புகள் வழங்குவதிலும் சரி எடப்பாடிக்கு சரியாக வழிகாட்டுகிறார்கள் என்று அதிமுகவினர் சந்தோஷத்தில்…

வெளியேற முயற்சிக்கும் எடப்பாடி இணைப்பை பலப்படுத்தும் பன்னீர்செல்வம்

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும், அதிமுகவுக்குள்ளும் மில்லியன் டாலர் கேள்வியால் மின்னிக் கொண்டிருக்கிறது. இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த தேர்தலிலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்றும் அவரை வைத்தே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் வியூகம் அமைக்கப்படும் என்றும் ஜூலை மாதத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் பேட்டி கொடுத்தார். அதை எடப்பாடி பழனிசாமியும் மற்ற கொங்கு அமைச்சர்களும் ரசித்தார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமி…

நடிகர் எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு வழக்குபதிவு

பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் தமிழக அரசுவழக்குப் பதிவு செய்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகரின் சமீபத்திய பேச்சுக்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் உண்டானது. பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய அவருக்கு எதிராக பல புகார்கள் அளிக்கப்பட்ட நிலையிலும், அவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை. இதனிடையே மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வரை விமர்சித்து எஸ்.வி.சேகர் வீடியோ வெளியிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர், எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார், வழக்கு…

தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் – முதலமைச்சர் கே. பழனிசாமி

தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கை குறித்து விரிவாக கூறியுள்ளார். தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இந்த உணர்வை பல கட்டங்களில் போராட்டங்கள் மூலமாகத் தெரிவித்துள்ளனர். 1965ஆம்…

புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

புதிய கல்வி கொள்கை 2020 தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது – முதல்வர் பழனிசாமி

ஈரோடு : கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது, இதனை அவர் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பகுதியை மாவட்டமாக்கும் திட்டம் உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று உறுதியளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் சிறுமியை கடத்த முயன்ற வழக்கில் நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், கொரோனா காலத்திலும்…

கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது; சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலத்தில் ரூ.441 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் திட்டத்துடன் ஈரடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஈரடுக்கு மேம்பாலத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படுகிறது. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை மேலும் குறைக்க…

புதன்கிழமை வருதாம் சீனாவிலிருந்து கொரோனா சோதனைக் கருவி!

சீனாகிட்ட தமிழ்நாடு ஒரு லட்சம் விரைவு சோதனைக் கருவிகளை கேட்டதாக ஏப்ரல் 8 ஆம் தேதி சுகாதாரத்துறை அறிவித்தது. பிறகு ஓரு நாளில் வந்துசேரும் என்று முதல்வரும் அறிவித்தார். அதுக்கடுத்து 10 ஆம் தேதி பேசிய தலைமைச் செயலாளர் மத்திய அரசுதான் நமக்கு கொடுக்கும் என்று சொன்னார். இதற்கிடையில் சீனா அனுப்பவிருந்த கருவிகள் அமெரிக்காவுக்கு போய்விட்டதாக கூறப்பட்டது இந்நிலையில்தான் வரும் புதன்கிழமை சீனாவிலிருந்து கொரோனா நோய் கண்டறியும் விரைவு சோதனைக் கருவி இந்தியாவுக்கு வந்துசேரும் என்று மத்திய…