Browsing: education

தமிழ்நாடு இருமொழி கொள்கையை தொடரும்-கே.பி.அன்பழகன்

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டிலேயே புதிய கல்விக் கொள்கையை அமலுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.…

தோவாளையில் அரசு வழங்கிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு

குமரி: தோவாளையில் அரசு வழங்கிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் சாலையோரம் கிரந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களிடம் புத்தகங்களை ஒப்படைக்க சென்றவர்கள் டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு மயங்கி கிடந்தனர். பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்கான புத்தகங்களை உள்ளுறை சேர்ந்தவர்களிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. புத்தக பைகளை மாணவர்களிடம் ஒப்படைக்காமல் சாலையோரம் போட்டுவிட்டு மது அருந்தியுள்ளனர். சாலையோரம் கிடந்த புதிய புத்தகங்கள், சீருடைகளை பொதுமக்கள் மீண்டும் பள்ளியில் ஒப்படைத்தனர்.

இருமொழி கொள்கை ஒன்றுபடும் தமிழக கட்சிகள்

புதியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை திட்டம் திணிக்கப்படுகிறது என்று எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஆகஸ்டு 3) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தி உள்ளனர். 1963-ம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை…

புதிய கல்வி கொள்கையை ஆராய கல்வியாளர்கள் குழு அமைக்கிறது தமிழக அரசு

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு குழு அமைக்கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற தொடங்கியுள்ளன 1967க்கு பின் அண்ணா கொண்டு வந்த இருமொழிக் கொள்கை தமிழகத்தில் இன்று வரை அமலில் இருக்கும் நேரத்தில், மும்மொழிக் கொள்கையை திணிக்கும் விதத்தில் கல்விக் கொள்கை இருப்பதாகவும், இதனை நிராகரிக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் தமிழக அரசு, மும்மொழிக்…

புதிய கல்வி கொள்கைதமிழக கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் முயற்சி -தங்கம் தென்னரசு

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை பற்றி முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை திராவிட ஆட்சியில் தமிழகத்தை பொறுத்தவரை கல்வித்துறையில், முன்னேறிய கல்வி கட்டமைப்பு உருவானது. இந்த கட்டமைப்பை முழுமையாக சீர்குலைக்க நடக்கும் முயற்சியே புதிய கல்விக்கொள்கையாகும். இதனால் தமிழக பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை விகிதம் பெருமளவு குறையும். இடைநிற்றல் அதிகரிக்கும். காமராஜர் முதல்வராக இருந்த காலத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதி காலம் வரை, பட்டிதொட்டியெங்கும் உருவாக்கப்பட்ட தொடக்கப்பள்ளியை இழுத்து…

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்: மத்திய அரசு

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்; என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி, மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி, ஒரு விருப்ப மொழியாக இருக்கும். சமஸ்கிருதம் மட்டுமல்லாமல், இதர தொன்மை வாய்ந்த மொழிகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே எழுதலாம் – மனிதவளத்துறை

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் அந்தந்த ஊரிலேயே எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவளத்துறை தெரிவித்துள்ளது. சொந்த மாநிலத்தை விட்டு பிற மாநிலத்தில் இருக்கும் மாணவர்கள் அவர்கள் இருக்கும் ஊரிலேயே 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவளத்துறை அறிவித்துள்ளது.

உலகின் முதல் பட்டதாரிப் பெண்!

அவர் பெயர் எலினா. வெனிஸ் குடியரசைச் சேர்ந்தவர். எலினா கோர்னரோ பிஸ்கோபியா என்பது இவருடைய முழுப்பெயர். இந்தப் பெயர் வாய்க்குள் நுழையவில்லை என்றால், ஹெலன் கோர்னரோ என்று அழைக்கலாம். 1646 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி பிறந்த இவர், பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. இவர் பிறக்கும்போது இவருடைய பெற்றோருக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. இவருடைய தாய் ஜனெட்டா போனி நிஜத்தில் ஒரு விவசாயக்கூலி. பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய வம்ச பாரம்பரியம் கெட்டுவிடாமல் தங்களுக்குள்ளேயே…