Browsing: election

தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர் விஷால்

அடுத்தாண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர் விஷால் முடிவெடுத்துள்ளதாக அவரது நட்பு வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கெனவே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா இறந்தவுடன் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றபோது அத்தேர்தலில் விஷால் போட்டியிட்டார். ஆனால், விஷாலின் வேட்பு மனு பல்வேறு காரணங்களினால் தள்ளபடி செய்யப்பட்டது. அந்தத் தேர்தலின்போது விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்திலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்…

மேலும் பின்னடைவைச் சந்திக்கும் டிரம்ப்

டெக்சாஸ் உட்பட 17 மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் டிரம்புக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபைடன் அமோக வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி, பல்வேறு மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்து கோர்ட்டுகளில் டிரம்ப் தரப்பினர் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாநில…

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் என்கிறாரே மோடி. ஏன்?

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நாடாளுமன்றம் அனைத்து சட்டமன்ற தேர்தல்களையும் நடத்தி முடிக்க வேண்டும் என்கிறாரே மோடி. ஏன்? அவர் சொல்கிறார் நேரமும் பணமும் சிக்கனமாகுமாம்…அட! வெளக்கெண்ண! தேர்தலில் செலவிடும் பணம் உள் நாட்டுக்குள் நடக்கும் பண சுழறச்சி, பண புழக்கம் தானே … அப்புறம் என்ன? நேரம் சிக்கனம் என்பது ஓர் சாக்குமட்டுமே….உண்மை நோக்கம்… வேறு….. அடிக்கடி தேர்தல் எனில் ஆளும் அரசு ஒடுக்குமுறைகளையும், மக்கள் விரோத திட்டங்களையும் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது ……

2ம் நாளாக நடைபெறுகிறது சிறப்பு வாக்காளர் முகாம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் திட்டமிட்டப்படி அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதன் படி, தேர்தலை எதிர்நோக்கி பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையமும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த நவ.16ம் தேதி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில், திருத்தம் மேற்கொள்ள…

பாஜக கூட்டணி முன்னிலை

பீகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தும், ஆளும் ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தும் நேரடியாக களம் கண்ட நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், தற்போது முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் மீண்டும் அரியணை…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பீகார் 243 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று தொடங்கியது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி, நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி என நேரடியாக களம் கண்டனர். இதில் தேஜஸ்வி யாதவ் கூட்டணி வெற்றிபெறும் என கருத்து கணிப்பு சொல்கிறது. இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. 38 மாவட்டங்களில் 55…

காங்கிரஸ் முயற்சிக்கும் புதிய கூட்டணி

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்துகொண்டிருப்பதை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் தங்கள் இப்போதைய வியூகங்களை மதிப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி முந்தைய தலைவர்கள் போல அல்லாமல் முக்கியமான நிர்வாகிகள், கட்சியின் சீனியர்கள், அபிமானிகள் ஆகியோரிடம் தினம் தினம் உரையாடி வருகிறார். கடந்த சில வாரங்களாக திமுகவின் துணையின்றி அதாவது காங்கிரஸ் தன் சொந்தக் காலிலேயே போராட்டங்கள் நடத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அழகிரி. கூட்டணி என்பது ஒருபக்கம்…

இலங்கையில் கொரோனா தாக்கம் காரணமாக தடைபட்ட நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கும்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கபட்டு இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு முன்னோட்டமாக வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வாக்குச் சாவடியில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எப்படி வாக்கு செலுத்துவார்கள் என்று தேர்தல்…

18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் திருச்சி சிவா, ரங்கராஜன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ் ஆகியோர் உள்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 55 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்.,2-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து,…