Browsing: electricity

வீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்

சோலார் பேனல்கள் சூரியனிடம் இருந்து வரும் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி தான் மின்சாரத்தை உருவாக்குகின்றன. நமது சூரியன் ஒரு சிறந்த அணுக்கரு இணைவு நடக்கும் அணு உலை போன்றது. அதாவது சூரியனின் மையப்பகுதியில் தொடர்ந்து ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு நடைபெறும் அணுக்கரு இணைவு நிகழ்வின் போது மிக அதிகமான ஆற்றல் வெப்பமாகவும் ஒளியாகவும் வெளியிடப்படுகிறது. இப்படி சூரியனில் இருந்து வெளிவரும் ஒளியில் ஃபோட்டான்கள் இருக்கும். இந்த போட்டான்கள் சூரியனில் இருந்து பூமிக்கு…

ரஷ்ய மின் நிலையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் சிவப்பாக மாறிய ஆம்பர்ன்யா நதி

ரஷ்யாவின் சைபீரிய மாகாண மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் ஏற்பட்ட கசிவு ஆற்றில் கலந்து மாசுபடுத்தியுள்ளதால் ஆறானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. ரஷ்யா நாட்டில் சைபீரியா மாகாணத்தின் நோரில்ஸ்க் நகரில் இருக்கும் மின்நிலையம் உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான, நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானது. மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தீடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த தொட்டியில் இருந்த சுமார் 20,000 டன் எண்ணெய் முழுவதும்…

ஏப்ரல் 5: மின் இணைப்புகளில் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன தெரியுமா?

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைவரும் ஒன்றிணைந் திருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு துவங்கி 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைக்கும்படி இந்தியப் பிரதமர் மோதி கோரிக்கை விடுத்திருக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் விளக்குகளை அணைப்பதால் மின் தொடரமைப்பு பாதிக்கப்படுமா? வெள்ளிக்கிழமையன்று நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் பேசிய பிரதமர் மோதி, ஞாயிற்றுக் கிழமையன்று இரவு 9 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிடும்படி கோரியிருக்கிறார். இதற்கு…