Browsing: england

கைவிரல் அளவுள்ள அதிசய குரங்குகள்

இந்த உலகம் பல அதிசயங்களாலும் ஆச்சர்யங்களாலும் நிரம்பியுள்ளது. நாள்தோறும் புதிய தகவல்களைத் தருமளவு இந்தப் பூமி பெரும் பரப்புடையதாக உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் உலகிலேயே சிறிய வகை குரங்கான மார்கோசெட் என்ற அரிய வகை ஒரு குக்குரங்குகள் பிறந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த குக்குரங்குகள் 5 செமீ நிளமும், 10 கிராம் எடை உள்ளது. குறிப்பாக மனிதனின் விரல் அளவில் இது உள்ளதால் மக்கள் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கும்

இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம்…

இரண்டாவது டெஸ்ட்டில் வலுவான நிலையில் இங்கிலாந்து

இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து படுதோல்வி அடைந்தது. அதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிப்ளி அபாரமாக ஆடி சதமடித்தார். 372 பந்துகளை சந்தித்த அவர் 120 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின் வரிசைக்காரரான பென்…

இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்

கால்பந்து உலக கோப்பையை 1966ம் ஆண்டு வென்ற இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ‘பிக் ஜாக்’ என்று அழைக்கப்படும் வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து ஒரே முறைதான் வென்றுள்ளது. இங்கிலாந்தில் 1966ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி முதல் முறை சாம்பியன் ஆனது.அந்த அணியில் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் பலரையும் ஈர்த்தவர்கள் சகோதரர்கள் ஜாக் சார்ல்டன்,…

கொரோனாவில் இருந்து மீண்ட இங்கிலாந்து இளவரசர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 8 லட்சம் பேருக்கு மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 47,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு 200 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 1834 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகளவில் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இந்நிலையில் இளவரசர் சார்லஸுக்கு தற்போது கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தொற்று சோதனைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரும் அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தனிமைப் படுத்தப்பட்டனர். ஸ்காட்லாந்தில்…