Browsing: examination

அண்ணா பல்கலை. தேர்வு கட்டணத்தை திருப்பி தர தேவையில்லை

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் திருப்பி தர தேவையில்லை என்று சென்னை உயர்மன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இறுதி பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணங்களை செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான பல்கலை. தரப்பு வழக்கறிஞர், நியாயாமான முறையிலேயே கட்டணம் வசூலிக்கப்பட்டது. விடைத்தாள்கள் திருத்தும் பணி…

நீட் தேர்வில் பின்தங்கும் தமிழ்நாடு

தமிழகத்தில் இந்த வருடம் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அது கிடப்பில் உள்ளது. தற்போது, கொரானா பரவலை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து…

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி – இந்த ஆண்டும் மாணவிகள் சாதனை

பிளஸ்2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டின் மொத்த தேர்ச்சி வீதம் 92.3 சதவீதம். இது கடந்த ஆண்டைவிட 1 சதவீதம் அதிகம். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7,127 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று காலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 24ம் தேதி…

10ம் வகுப்பு தேர்வு ரத்து என்பது காலம் கடந்து எடுத்த முடிவு என்றாலும் வரவேற்கிறோம்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

10ம் வகுப்பு தேர்வு ரத்து என்பது மிகவும் காலம் கடந்து எடுத்த முடிவு என்றாலும் வரவேற்கிறோம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது ஆபத்தான சூழலில் தேர்வு எழுத வேண்டுமா என அஞ்சிக் கொண்டிருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த நிம்மதியை அளித்திருக்கிறது. வைகோ (மதிமுக பொது செயலாளர்): அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நன்றி…

ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; வரும் 8-ம் தேதிக்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு திரும்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால…

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே எழுதலாம் – மனிதவளத்துறை

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் அந்தந்த ஊரிலேயே எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவளத்துறை தெரிவித்துள்ளது. சொந்த மாநிலத்தை விட்டு பிற மாநிலத்தில் இருக்கும் மாணவர்கள் அவர்கள் இருக்கும் ஊரிலேயே 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவளத்துறை அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது ? முதலமைச்சர் ஆலோசனை

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை தொடங்கியது . ஏற்கனவே மருத்துவ நிபுணர் குழுவினருடனான ஆலோசனை நிறைவடைந்த நிலையில் பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் எப்போது பள்ளிகளை திறப்பது என்பது குறித்து முதலமைச்சர் கருத்து கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிறது. அதேசமயம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 ஆம் கட்ட ஊரடங்கு…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனையடுத்து, தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இன்னும் 10ம் வகுப்பு தேர்வு…