Browsing: Exams

மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டுகிறதா-ராமதாஸ்

கல்லூரி தேர்வுகள் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அனைத்து மாநிலங்களும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதிப் பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்; இறுதித் தேர்வை ரத்து செய்யும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலர் அமித்…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை: டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் தகவல்

கொரோனா பாதித்த நிலையில் தற்போதைக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் அரசுப் பணிக்காக தேர்வு மூலம் அதிகளவில் தேர்வு செய்யப்படுவது தமிழகத்தில்தான். டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழகத்தில் ஆட்சிப் பணி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு ஏப்ரலிலும், குரூப்-2 தேர்வு ஜூலையிலும் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,…