Browsing: farmer bill

மீண்டும் ஒரு வர்ணாச்சிரம அடிமைச் சமூகத்தை நோக்கி…?

நில உடமையாளர்களின் வீடுகளில் ஒரு நேர கஞ்சிக்காக நாள்பூரா உழைத்த காலத்துக்கு மீண்டும் இந்தியாவை கொண்டு செலுத்துகிறது பாஜக அரசு என்கிறார்கள். இது கொஞ்சம் அதீதமான கற்பனையாக தோன்றலாம். ஆனால் 1959ல் பிறந்த நான் கண்ட பல காட்சிகளை மீண்டும் நினைவு படுத்திப் பார்க்கிறேன். அந்தக் காட்சிகள், இன்றைய பாஜக அரசின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு ஊர் என்றால் அதில் உள்ள சில நில உடமையாளர்களை நம்பியே பெரும்பான்மையான மக்கள் இருந்தார்கள். அவர்களுடைய நிலத்தில் உழைப்பதும்,…

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினர் விவசாயிகள்!

டெல்லி செங்கோட்டையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அங்குள்ள கொடிக்கம்பத்தில் தங்கள் கொடிகளை ஏற்றினர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தினமான இன்று சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் டிராக்டர் மூலம் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக டெல்லி செங்கோட்டையை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி…

போராட்டத்தை கைவிடுவது குறித்து இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தோமர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 60 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர், மழைக்கும் மத்தியிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தை நிறுத்த, மத்திய அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை. இதுவரை விவசாய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. தங்களின் கோரிக்கையை…

வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்புக்கு பிறகு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை என்று விவசாய அமைப்பின் தலைவர் ஒருவர் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தங்களது போராட்டத்தின் தீவிரத்தை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் நேற்று நாடு முழுவதும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பாரத் பந்த் நடத்தினர். இந்த…

நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : இந்தியாவின் உணவுப்படைவீரர்கள் விவசாயிகள். அவர்களுடைய அச்சங்களை நீக்கி அரசு அவர்களின் நம்பிக்கையை ஊக்கப்படுத்தி, அவர்களின் பிரச்சனைகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். #delhichallo #farmers #punjap #utterpradesh #haririyana https://twitter.com/priyankachopra/status/1335549408813826050

வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் விருது ரிட்டர்ன்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மத்திய அரசின் விருதை திரும்ப அளிப்பதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இன்றுடன் 11 நாட்களாக தொடரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசும் முடிந்த அளவு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விவசாயிகளின் உணர்வு கொந்தளிப்பான வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும்,  விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளைப் போற்றவும், இந்திய வேளாண்மைத்துறை வீழ்ந்து விடாமல் காப்பாற்றவும், தலைநகரம் டெல்லியில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வரும் விவசாயிகளின் மகத்தான போராட்டத்திற்கு…

வாழ்க குதிரைப்பந்தயம் வீழ்க விவசாயம்!

(விவசாயத்தை காப்பாற்ற இன்றைக்கு விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்துகிறார்கள். சொகுசாக சோறு சாப்பிடுகிறவர்கள் எவ்வளவு உல்லாசமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு விவசாயத்தைக் காட்டிலும் குதிரைப்பந்தயத்துக்காக செலவழிப்பதே முக்கியம் என்பதை அமரர் கல்கி இடக்காக இந்த கதையில் கூறியிருக்கிறார்) சிவசங்கர முதலியாருக்கு ரயில் பாதை ஓரமாகக் கொஞ்சம் புன்செய் நிலம் இருந்தது. வெகு காலமாக அந்த நிலம் சாகுபடி செய்யப்படாமல் தரிசாகக் கிடந்தது. “பஞ்சத்தைத் தீர்க்க ஒத்துழையுங்கள்!” என்றும், “உணவு உற்பத்தியை அதிகமாக்குங்கள்!” என்றும் நாடெங்கும் செய்யப்படும் பிரசாரம் சிவசங்கர…

விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.,5ல் தமிழகத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (3.12 2020) காலை காணொலிக் காட்சி வழியாக தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: தீர்மானம் : டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து தி.மு.க.வின் ஆர்ப்பாட்டம் “உழுவார், உலகத்தார்க்கு ஆணி”; மக்களின் பசிப் பிணித் துயர் போக்கும் தோணி; நாட்டின் வளர்ச்சிக்கு ஏணி; என்ற முதன்மையையும், முக்கியத்துவத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும். நாட்டின் விவசாயப்…

விவசாயிகள் போராட்டத்தால் ஸ்தம்பித்த ரயில்வே!!!

விவசாயிகள் போராட்டம் காரணமாக, வடக்கு ரயில்வே இயக்கும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாவை எதிர்த்து விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பல இடங்களில் ரயில் நிலையங்களுக்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்றும் முடிவுக்கு வரவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் சில ரயில்களை ரத்து செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. சில ரயில்கள் பாதை மாற்றிவிடப்பட்டுள்ளன. 09613 டிசம்பர் 2 முதல் அஜ்மீர்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் சிறப்பு…

விவசாய சட்டங்களை ரத்து செய்யவில்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்..

விவசாய சட்டங்களை ரத்து செய்யவில்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று பா.ஜ.க.வை அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்.எல்.பி.) மிரட்டல் விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இடம் பெற்று இருந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு…

இந்திய விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் கனடா பிரதமர்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போலீசாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போராடி வருகின்றனர். ‘6 மாதங்களுக்கு தேவையான பொருட்களுடன் வந்துள்ளோம்,…