Browsing: Farmer

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினர் விவசாயிகள்!

டெல்லி செங்கோட்டையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அங்குள்ள கொடிக்கம்பத்தில் தங்கள் கொடிகளை ஏற்றினர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தினமான இன்று சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் டிராக்டர் மூலம் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக டெல்லி செங்கோட்டையை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி…

போராட்டத்தை கைவிடுவது குறித்து இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தோமர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 60 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர், மழைக்கும் மத்தியிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தை நிறுத்த, மத்திய அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை. இதுவரை விவசாய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. தங்களின் கோரிக்கையை…

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!-

பொதுமக்களின் நலனுக்காக விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இன்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:- விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், பல ஆண்டுகளாக அவர்களுக்கு செய்யப்பப்ட்டு வந்த அநீதியை போக்கவும் மூன்று வேளாண் சட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு சிறந்த வாழ்க்கை கிடைக்கவும் நன்மை பயக்கும் விவசாயத்தில் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக இது செய்யப்பட்டது.…

வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்புக்கு பிறகு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை என்று விவசாய அமைப்பின் தலைவர் ஒருவர் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தங்களது போராட்டத்தின் தீவிரத்தை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் நேற்று நாடு முழுவதும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பாரத் பந்த் நடத்தினர். இந்த…

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (பாரத் பந்த்)

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்தும், அதனை திரும்பப் பெறக்கோரியும் இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விவசாயிகளின் உணர்வு கொந்தளிப்பான வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும்,  விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளைப் போற்றவும், இந்திய வேளாண்மைத்துறை வீழ்ந்து விடாமல் காப்பாற்றவும், தலைநகரம் டெல்லியில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வரும் விவசாயிகளின் மகத்தான போராட்டத்திற்கு…

இந்திய விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் கனடா பிரதமர்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போலீசாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போராடி வருகின்றனர். ‘6 மாதங்களுக்கு தேவையான பொருட்களுடன் வந்துள்ளோம்,…

டெல்லியை முற்றுகையிட்ட கோடிக்கால் பூதம்

”டெல்லிக்குள் வந்த விவசாயிகள் முதலில் அரசு ஒதுக்கி இருக்கும் புராரி பார்க்கில் தங்கினால் உடனடியாக அரசு விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தும்“ என அமித்ஷா சொன்னதை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிராகரித்து விட்டது. அந்த புராரி பார்க் என்பது விவசாயிகளுக்கான திறந்த வெளி ஜெயிலாகத்தான் இருக்கும் என்றும், இப்படி கண்டிஷன் போடுவதை அரசு முதலில் நிறுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் செவிட்டில் அறைந்த மாதிரி சொல்லி விட்டனர். வேளாண் சட்டங்கள் மூலம் இந்தியாவில் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்று…

விவசாயிகள் போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு நடிகர் சோனு சூட், மற்றும் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களை போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சிகளை மேற்கொண்டு…

வேளாண் சட்டங்களை எதிர்த்து பொங்கிவரும் விவசாயிகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டாவது நாளாக, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்குப் பேரணியாகச் செல்ல முயல்வதால் அவர்கள் மீது, டெல்லி- ஹரியானா எல்லையில் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் கலைத்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘தலைநகரில் ஒன்று கூடுவோம்’ என்ற பெயரில் பேரணியாகச் சென்று டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு திட்டமிட்டது. இதற்காக ஹரியானா, பஞ்சாப்…

காங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள் போராட்டம்

பாரத் பெட்ரோலியத்தின் இருகூர்-தேவனகொந்தி எண்ணெய்க்குழாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரம் பெற்ற அலுவலரால் 3,4,6/11/2020 ஆகிய மூன்று நாட்கள் நில எடுப்பிற்கான விசாரணை அழைப்பாணை படியூர், சிவன்மலை, மரவபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு விவாதித்து கீழ் கண்ட முடிவினை எடுத்துள்ளது. அதன் விபரம் பின் வருமாறு: ஐடிபிஎல் திட்டத்தை கெயில் திட்டத்திற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா வகுத்த கொள்கைப்படி சாலையோரமாக…

4.5 ஏக்கர் நெற்பயிரை அழித்த உத்தர பிரதேச விவசாயி..

உத்தர பிரதேசத்தில், நியாயமான விலை கிடைக்காத விரக்தியில் அறுவடைக்கு தயாராக இருந்த 4.5 ஏக்கர் நெற்பயிரை விவசாயி அழித்த சம்பவம் பெரும் வேதனை மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரை சேர்ந்தவர் சட்னம் சிங். விவசாயத்தை தொழிலாக மேற்கொண்டு வருகிறார். அவர் அண்மையில் தனது 4.5 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்தார். நெற் பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. அதனால் நெல்லுக்கு விலை பேசி விட்டால் அறுவடை பணிகளை…