Browsing: #FarmerProtest

மூத்த குடிமக்கள், சிறுவர்கள் வீட்டுக்கு செல்லுமாறு கோரிய மத்திய அமைச்சர்… நிராகரித்த விவசாய தலைவர்கள்

டெல்லியில் போராட்ட களத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர்களை வீட்டுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் கோரிக்கையை விவசாய தலைவர்கள் நிராகரித்தனர். டெல்லி எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விவசாய தலைவர்களுடன் மத்திய அரசு நேற்று 5வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது போராட்ட பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர்களை தயவு செய்து வீட்டுக்கு…

விவசாயிகளை மோடி நேரில் சென்று சந்திக்க வேண்டும் – திமுக கூட்டணி காட்டமான அறிக்கை!

குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து – விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்! அவர்களின் உணர்வுகளைப் புரிந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விவசாயிகளுடன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்! மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அங்கேயே அறிவிக்க வேண்டும் என்று திமுக கூட்டணியின் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.