Browsing: Farmers protest

வங்கத்தை உலுக்கிய தேபாகா போராட்டம் – விவசாயிகள் போராட்டம் 1

1946ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஒன்றுபட்ட வங்கத்தில் மாபெரும் உழைப்பாளர் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவர்கள் பெண்கள் என்றால் வியப்பாக இருக்கும். விவசாயத்தை பின்புலமாக கொண்ட எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் “நாரி பாகினி” என்ற பெண்கள் படையை முன்னின்று நடத்தினார்கள். தேபாகா என்றால் “மூன்று பங்கு” என்று பொருள். வங்கத்தில் நிலத்தின் உரிமையாளருக்கு, அதில் உழைப்பவர்கள் விளைச்சலில் பாதியை தந்தாக வேண்டும். ஆனால், உழைப்பவர்களுக்கு இரண்டு பங்கும், உரிமையாளருக்கு 1 பங்குமாக குறைக்க…

மீண்டும் ஒரு வர்ணாச்சிரம அடிமைச் சமூகத்தை நோக்கி…?

நில உடமையாளர்களின் வீடுகளில் ஒரு நேர கஞ்சிக்காக நாள்பூரா உழைத்த காலத்துக்கு மீண்டும் இந்தியாவை கொண்டு செலுத்துகிறது பாஜக அரசு என்கிறார்கள். இது கொஞ்சம் அதீதமான கற்பனையாக தோன்றலாம். ஆனால் 1959ல் பிறந்த நான் கண்ட பல காட்சிகளை மீண்டும் நினைவு படுத்திப் பார்க்கிறேன். அந்தக் காட்சிகள், இன்றைய பாஜக அரசின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு ஊர் என்றால் அதில் உள்ள சில நில உடமையாளர்களை நம்பியே பெரும்பான்மையான மக்கள் இருந்தார்கள். அவர்களுடைய நிலத்தில் உழைப்பதும்,…

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினர் விவசாயிகள்!

டெல்லி செங்கோட்டையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அங்குள்ள கொடிக்கம்பத்தில் தங்கள் கொடிகளை ஏற்றினர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தினமான இன்று சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் டிராக்டர் மூலம் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக டெல்லி செங்கோட்டையை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி…

போராட்டத்தை கைவிடுவது குறித்து இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தோமர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 60 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர், மழைக்கும் மத்தியிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தை நிறுத்த, மத்திய அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை. இதுவரை விவசாய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. தங்களின் கோரிக்கையை…

கல்மனம் கொண்ட மோடிக்கு காலம் பதில் சொல்லியே தீரும்!

விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டம் பிரமிப்பூட்டுகிறது. கொட்டும் மழை, வாட்டும் குளிர், அரச பயங்கரவாதம் என அத்தனை இடையூறுகளையும் தாண்டி, 40க்கும் மேற்பட்டோர் மடிந்த நிலையிலும், 45 நாட்களாக கொஞ்சமும் உறுதிகுலையாமல் களத்தில் நிற்கும் விவசாயிகளுக்கு தலைவணங்குகிறேன். ‘போராடி போராடி சோர்வடையும் நேரத்தில் அதனை கைவிடுவார்கள்’ என்கிற மோடி அரசின் வழக்கமான குரூர யுக்தி விவசாயிகளிடம் பலிக்கவில்லை. அதுபோலவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆதரவு, காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைகோர்ப்பு என்கிற ஆர்.எஸ்.எஸ்…

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!-

பொதுமக்களின் நலனுக்காக விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இன்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:- விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், பல ஆண்டுகளாக அவர்களுக்கு செய்யப்பப்ட்டு வந்த அநீதியை போக்கவும் மூன்று வேளாண் சட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு சிறந்த வாழ்க்கை கிடைக்கவும் நன்மை பயக்கும் விவசாயத்தில் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக இது செய்யப்பட்டது.…

வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்புக்கு பிறகு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை என்று விவசாய அமைப்பின் தலைவர் ஒருவர் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தங்களது போராட்டத்தின் தீவிரத்தை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் நேற்று நாடு முழுவதும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பாரத் பந்த் நடத்தினர். இந்த…

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (பாரத் பந்த்)

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்தும், அதனை திரும்பப் பெறக்கோரியும் இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று…

விவசாயத்தை (யும்) கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் மோடி அரசு

அம்பானி, அதானி மற்றும் பிற கார்பரேட் பெரு முதலாளிகளின் நிறுவனங்கள் இந்தியாவின் உணவு தானியங்கள் சந்தையில் களம் இறங்கினார்கள், ஆனால் அங்கே ஏராளமான பிரச்சனைகள் அவர்களுக்காக காத்திருந்தன. பிரச்சனை 1 : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உணவு தானியங்கள் தொடர்பாக வெவ்வேறு சட்டங்கள், நடைமுறைகள் இருந்தன. அதனால் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வழிமுறைகளை அவர்கள் கையாள வேண்டியதிருந்தது. மோடியின் தீர்வு: மாநிலங்களிடமிருந்து இந்த உரிமைகளை கையகப்படுத்தி ஒரே நாடு ஒரே…

நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : இந்தியாவின் உணவுப்படைவீரர்கள் விவசாயிகள். அவர்களுடைய அச்சங்களை நீக்கி அரசு அவர்களின் நம்பிக்கையை ஊக்கப்படுத்தி, அவர்களின் பிரச்சனைகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். #delhichallo #farmers #punjap #utterpradesh #haririyana https://twitter.com/priyankachopra/status/1335549408813826050

வாழ்க குதிரைப்பந்தயம் வீழ்க விவசாயம்!

(விவசாயத்தை காப்பாற்ற இன்றைக்கு விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்துகிறார்கள். சொகுசாக சோறு சாப்பிடுகிறவர்கள் எவ்வளவு உல்லாசமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு விவசாயத்தைக் காட்டிலும் குதிரைப்பந்தயத்துக்காக செலவழிப்பதே முக்கியம் என்பதை அமரர் கல்கி இடக்காக இந்த கதையில் கூறியிருக்கிறார்) சிவசங்கர முதலியாருக்கு ரயில் பாதை ஓரமாகக் கொஞ்சம் புன்செய் நிலம் இருந்தது. வெகு காலமாக அந்த நிலம் சாகுபடி செய்யப்படாமல் தரிசாகக் கிடந்தது. “பஞ்சத்தைத் தீர்க்க ஒத்துழையுங்கள்!” என்றும், “உணவு உற்பத்தியை அதிகமாக்குங்கள்!” என்றும் நாடெங்கும் செய்யப்படும் பிரசாரம் சிவசங்கர…

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் – மம்தா பானர்ஜி எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறவில்லை என்றார் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், “விவசாயிகள் வாழ்க்கை நிலை எனக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். அந்த சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், நாங்கள் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம்…