Browsing: film festival

கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி மாற்றம்

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் புகழ்பெற்றது. இதுவரை 50 ஆண்டுகள் சிறப்பாக நடந்து முடிந்த இந்த விழாவின் 51 ஆவது ஆண்டு விழா நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இப்போது அதை ஜனவரி 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என மாற்றப்பட்டுள்ளது.

பெண்கள் சர்வதேச பட விழாவுக்கு தேர்வான ஒரே இந்தியப் படம்

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் அமர் ராமச்சந்திரன் தமிழில் நடித்த தாய்நிலம் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசிற்கு தயாராக உள்ளது. இந் நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் ’பக்ஷிகளுக்கு பறயான் உளது’ (பறவைகள் சொல்ல நினைப்பது ) படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பஹாமாஸ் நாட்டில் நடைபெற உள்ள உலக பெண்கள் திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு திரைப்படமும் இதுவே… சுதா ராதிகா என்ற பெண்…