Browsing: film

இளையராஜாவுடன் முரண்பாடு கார்த்திக் ராஜாவிடம் உடன்பாடு – மிஷ்கின்

மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, பிசாசு மற்றும் அண்மையில் வெளியான சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இளையராஜாவுடன் முரண்பட்டுக் கொண்டாராம் மிஷ்கின்.இனிமேல் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற இயலாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம். மிஷ்கின் இப்போது, சிம்பு நடிக்கும் புதிய படம் அல்லது அருண்விஜய் நடிப்பில் அஞ்சாதே 2 ஆகிய இரண்டில் ஏதாவதொன்றைத் தொடங்க முயன்று கொண்டிருக்கிறார். அப்படங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்,…

திரையரங்குகளுக்கு தளர்வுகள் இல்லைஅமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறக்க இப்போதைக்கு தளர்வுகள் வழங்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த 120 நாட்களுக்கும் மேலாக அவை முடங்கிப் போயிருக்கும் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என திரையுலகினர் பலரும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக திரைப்படத் தயாரிப்பாளர்களில்…

பாடகி சுசித்ராவை எச்சரித்த காவல்துறை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ பதிவை யாரும் நம்ப வேண்டாம் என்று சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இது குறித்து பாடகி சுசித்ரா விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரின் தாக்குதலால் மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து…

அமிதாப்பச்சனையும் விடாத கொரானா தொற்று

இந்திய சினிமாவில் மூத்த நடிகர், தன் வயதுகேற்ற வேடங்களில் நடித்து, இன்றைக்கும் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினர், வீட்டிலிருந்த பிற வேலையாட்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து கொரோனா…

ரஜினியை பாராட்டிய இயக்குனர் சேரன்

மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் சூப்பர்ஸ்டார்’ என்று குறிப்பிட்டு இயக்குநர் சேரன் நடிகர் ரஜினிகாந்த் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கொரோனா அச்சம் மற்றும் லாக் டவுன் காரணமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முடங்கியுள்ளது. இந்த ஓய்வு நேரத்தில் திரைத்துறையினரில் பலரும் சமூக வலைதளங்களில் மும்முரமாக இயங்கி வருகின்றனர். இயக்குநர் சேரன் தற்போது ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து கருத்துப் பதிவிட்டு வருகிறார். மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வந்த அவர், தனது வாழ்க்கையின் மறக்க…

ஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத் – தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பெருமிதம்

80-20 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்பது குழி சம்பத். வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கிறது. ஆன்லைன் தியேட்டரா? அப்படின்னா என்ன? அதில் என்ன புதுமை? ஒன்பது குழி சம்பத் படத்தின் ஒரு வரி கதை உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு…. *ஒன்பது குழி சம்பத் படத்தை ஆன்லைன் தியேட்டரில் வெளியிடுவதாகச் சொல்கிறீர்களே? அது என்ன ஆன்லைன் தியேட்டர்?* தியேட்டரில் படம்…

20 விருதுகளைக் குவித்த குறும்படம்..

நடிகர் விஷால், இயக்குநர்கள் பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய்மில்டன், அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர்’ எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். “ஒரு நல்ல குறும்படத்தைப் பார்த்த திருப்தி எங்களுக்குக்கிடைத்தது “என்று அவர்கள் மனதார படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். அறம், தர்மம், நீதி, நியாயம், மனசாட்சி என்பது பற்றியெல்லாம் ஆளுக்கொரு ஒரு விளக்கம் கூறுவார்கள். ஆனால்…