Browsing: flight

கேரளாவில் தரையிறங்கிய போது இரண்டாக உடைந்த விமானம் 19 பேர் உயிர் இழப்பு

வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில்துபாயிலிருந்து கேரளாவுக்கு 191 பேருடன் நேற்று இரவு வந்த ஏர் இந்தியா விமானம்விபத்துக்குள்ளானதில்,இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சிக்கி இருப்பவர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் துபாயில் சிக்கித் தவித்தவர்களை அழைத்து வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயிலிருந்து ஏர் இந்தியா axb-1344 விமானத்தில்…

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளன

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக விமான போக்குவரத்து மற்றும் ரயில், பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த மே மாதம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரயில் சேவை போன்று விமான சேவையும் தமிழகத்துக்கு வேண்டாம் என்று தமிழக…

வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்க 11 விமானங்கள் தயார்

கொரோனா பாதிப்பு, முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் முடங்கியுள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு மே 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை, 64 விமானங்கள், 3 கப்பற்படை கப்பல்கள் உள்ளிட்டவைகளை அனுப்ப உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், விமானத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக அபுதாபியில் தவித்து வரும் கேரளாவை சேர்ந்த 209 பேர் கொச்சி அழைத்து வரப்பட உள்ளனர். அடுத்த விமானம் மூலம் 200…