Browsing: freedom fighter

அமீர்சந்த் (1869-1915)

மாஸ்டர் அமீர்சந்த் 1869ல் பிறந்தார். அவரது தந்தை ராய் ஹூக்கும் சந்த், ஹைதராபாத் சட்டமன்ற செயலாளராக பணியாற்றினார். சுதேசி இயக்கத்தின்போது கினாரி பஜார் பகுதியில் சுதேசி அங்காடியைத் துவக்கி போராட்டத்தில் பங்கேற்றவர் அவர். தேசியத் தலைவர்களின் படங்கள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளை அந்த கடைமூலம் விற்பனை செய்தார். நாட்டின் நலனுக்காக சேவை செய்யவேண்டும் என்ற அமீர்சந்தின் அவா அளப்பரியது. அவர் ஒரு மாநாட்டு அரங்கை துவக்கினார். அங்கு தேசிய வாதத் தலைவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினர். 1907ல்…

அஜ்மல்கான் (1863-1927)

ஜாமியா கல்விநிறுவனத்தை நிறுவியதில் மிக முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் அஜ்மல்கான். 1927ஆம் ஆண்டுவரை ஜாமியா கல்விநிறுவனத்தின் முதல் வேந்தராக பொறுப்பு வகித்தவர் அவர். 1863ல் டில்லியில் பிறந்தார். தொழில் ரீதியாக அவர் ஒரு சிறந்த மருத்துவர் ஆவார். ஹக்கீம் அஜ்மல்கான், 1906ம் ஆண்டில் திப்பி மாநாட்டினை நடத்தினார். அதே ஆண்டில் முஸ்லிம்லீக் கட்சியை உருவாக்குவதில் முக்கிய பணியாற்றினார். 1908ல் ஹாசியா-உல்-முல்க் எனும் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின்போது மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்து தேசிய விடுதலை இயக்கத்தில்…