Browsing: god

காயத்ரி மந்திரம் -பொருள் என்ன?

காயத்ரி மந்திரம், சூரியனை நோக்கி பாடப்படுவதாகும். இதை காலையில், நீராடிய பிறகு கேட்க வேண்டும். அல்லது வார்த்தை பிறழாமல் சொல்ல வேண்டும். ‘ஓம் – பூர்புவஸ்ஸிவஹ தத் சவிதூர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நப்ரசோத யாத்’ என்ற காயத்ரி மந்திரத்தைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் தெரிந்து கேட்பது மிகவும் நல்லது. ஓம் – பர பிரம்மாகிய தெய்வம், பூர் – பூலோகம், புவ – வானத்துக்கும், பூமிக்கும் இடைப்பட்ட உலகம். கவஹ-சுவர்க்கம், தத்…

நந்தி பார்க்கும் திசை எது?

நந்தி இறைவனைப் பார்த்தபடியே அமைக்கப் பட்டிருக்கும். (ஒருசில தலங்களில் சிறப்பாக நந்தி எதிர்புறமாகவும் சற்று விலகியும் அமைந்திருக்கும்) நந்தி ஆன்மாவைக் குறிப்பது, பசு எப்போதும் பதியையே நாட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இறைவனை நோக்கியபடி நந்தி அமைக்கப்பட்டுள்ளது. மலநீக்கம் பெற்ற முக்தி பெற்ற ஆன்மாவே நந்தியாகும்.

தர்மத்திற்கு அழிவு இல்லை ஏன்?

தர்மதேவதை தான் அழியாமல் என்றும் நித்தியமாய் இருக்க விரும்பினாள். அதற்காக ரிஷப ரூபம் கொண்டு சிவனை வணங்கி தன்னை வாகனமாக ஏற்கும்படி வேண்டினாள். அதனை ஏற்று சிவபெருமான் வாகனமாக்கிக் கொண்டார். தர்மத்திற்கு அழிவு இல்லை என்பதும் இறைவனை தர்மத்தை வாகனமாகக் கொண்டார் என்பதனையும் இது உணர்த்துகின்றது.

நந்தியை முதலில் வழிபடுதல் ஏன்?

சிவாலய வழிபாடு செல்லும்போது சிவபெருமானை வணங்கும் முன்பு நந்தியிடம் அனுமதிபெற வேண்டும் என்பது மரபு, நந்தி எக்காலமும் மூச்சுக்காற்றால் விசிறிக் கொண்டிருக்கும் வழிபாட்டைச் செய்து கொண்டிருக்கிறார். எனவே அவரிடம் சென்று மூச்சுக் காற்றால் சிவத்தொண்டு புரிகின்ற மிகப்பெரிய பக்திமானாகிய நந்தியம் பெருமானை உமாசுதனை வழிபட எனக்கு அனுமதி தந்தருள். “நந்திகேசவா மஹா ப்ராக்ஞசிவத்யான் பாராயண உமா சங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் தாது மர்ஹசி” எனத் தியானித்து அனுமதி பெற்று சிவபெருமானை வணங்குவதற்காகவே நந்திபெருமான் காதில் மெல்ல பேசுகிறார்கள்.

தெய்வங்களின் வாகனம் எது?

சிவனுக்கு நந்தி வாகனம் அமைக்கப்படுவதுபோல ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு வாகனம் அமைக்கப்படும். முருகன் கோயிலில் மயிலும் சக்தி கோயிலில் சிங்கமும், விநாயகர் கோயிலில் மூஷிகமும் திருமால் தலங்களில் கருட வாகனமும் காணப்படும். முருகப் பெருமானுக்கு பொதுவாக மயில் வாகனம் காணப் பெரினும் சில தலங்களில் வேறு வாகனங்களும் இருப்பதுண்டு. ஆட்டுக்கடா, யானை (திருத்தணி, சுவாமிமலை, உத்திரமேரூர், பெரம்பூர், கந்தன்குடி)

இறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்?

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிபலன் உண்டு. பால் நீண்ட வாழ்வையும் தயிர், புத்திர விருத்தியையும், நெய் மோட்சத்தையும் பஞ்சகவ்யம் ஆன்ம விருத்தியையும் தரும், பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தனிச் சிறப்பு, பசுவின் மடிகளில் ஏழுசமுத்திரங்கள் வாசஞ் செய்வதால் பால் அபிஷேகம் ஏழு சமுத்திரங்களைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்ததாகக் கருதப்படும்.

வில்வத்தின் மகிமை

சிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு. இந்த வில்வ தழைகள் கிடைப்பதற்காக அனேகமாக, சிவன் கோயில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப்படும். இதை வளர்ப்பதால் அகவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும். காசி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும்.

மகாலட்சுமி எங்கு வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன?

சங்கு, நெல்லிக்காய், கோமயம், தாமரை, வெண்மையான பரிசுத்தமான ஆடை ஆகியவற்றில் லட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. வெண்ணிற மாடப்புறாக்கள், வாழும் இடம், அமைதியான பெண் வாழும் இடம், குவிந்துள்ள தானியங்கள், இரக்கமுள்ள மனிதனின் மனம், பண்போடு வாழும் மக்கள், நாவடக்கம் உள்ளவர் இல்லம், உணவு உண்ண அதிக நேரம் செலவிடாதவர்கள், பெண்களை தெய்வமாக பார்க்கும் ஆண்மகன் உள்ள இடங்களில் லட்சுமி வாசம் செய்வதாக நம் வேதங்கள் கூறுகின்றன. வீரனின் தோள்களிலும் லட்சுமி இருக்கிறாள்.

பூஜைக்கு உரிய மலர்கள்

இறைவன் பூமியின்மீது படைத்துள்ள அத்தனைப் பொருட்களும் அவனுக்கு உரியன. அதில் மலர்களும் அடங்கும். ஆயினும் எல்லா மலர்களும் எல்லா நேரங்களிலும் எல்லா இடத்திலும் கிடைப்பது கடினம். ஆகையால் கிடைக்கும் மலர்களையும் அதன் தன்மையையும் பயனையும் உணர்ந்து மனநிறைவோடு, மனப்பூர்வமாகப் பயன்படுத்தி பூஜை செய்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்க திருப்தி உண்டாகும். செந்தாமரை – செல்வம், தொழிலில் மேன்மை, ஆத்ம பலம், சூரியன் அருள். வெண்தாமரை- வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி போன்ற வெள்ளை மலர்கள் மனக்குறையை போக்கும்…