Browsing: gold rate

மீண்டும் உயரும் தங்கம் விலை

கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் தற்போது மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பொருளாதார சரிவுகள் ஏற்பட தொடங்கிய நிலையில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்ததால் தங்கம் விலை உயரத் தொடங்கியது கடந்த மாதத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை மெல்ல விலை குறைந்தது. தற்போது சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்து வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200…

தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ. 792 உயர்ந்து ரூ.42,208க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் 42,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 42,000 ரூபாயைத் தாண்டி வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது தங்கம் விலை. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனாவால் சர்வதேச அரங்கில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் மஞ்சள் உலோகம் என்று அழைக்கப்படும் தங்கத்தில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக…

உயரும் தங்கம் விலை ரூ.40,296-க்கு விற்பனை

தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று ரூ.24 உயர்ந்து ரூ.5037-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வை பார்த்து நகை வாங்குவார் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். இன்னும் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நகைக்கடைகள் இந்தியா முழுவதும் மூடப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட…

ரூ.38 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,736ரூபாயாக இருந்த நிலையில் இன்று 544 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது. மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,152 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது.