Browsing: gold smugling

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு நீதிமன்றக் காவல்

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மீண்டும் எர்ணாகுளம் காக்கநாடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. என்ஐஏ நீதிமன்றம் காவல் விதித்ததால் ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன்

கொரானா நோய்த் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாள் மாலையும் பத்திரிகையாளர்களை இந்தியாவில்சந்திக்கும் ஒரே முதல்வர் கேரள முதல்வர் பினராயி விஜயன் மட்டுமே தினந்தோறும் கொரானா நிலவரம் பற்றிஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதும், அதன்பிறகு மாலை நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில்,  கொரானா பாதிப்புகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பினராயி விஜயன் பேசுவார். அதன் பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார்.  நேற்று மாலை…

தங்கக்கடத்தல் வழக்கில் ரகசிய தொடர்பு – நடவடிக்கை எடுக்க வேண்டும்

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ரகசிய தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. எர்ணாகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரன், இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார். அண்மையில் தற்கொலைக்கு முயன்ற ஐக்கிய அமீரக துணை தூதர் அட்டஷிவின் மெய்க்காப்பாளர் ஜெய்கோஷ்-க்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பதாக சுரேந்திரன் குற்றம் சாட்டி இருக்கிறார். மெய்க்காப்பாளர் ஜெய்கோஷ் தான் பினராயி விஜயனை சிக்க வைக்கும் கன்னி என்றும் அவர்…