Browsing: Gold

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் ? தமிழர்களின் அறிவியல்

நமது முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும் ஆன்மீகமும் கலந்த விசயங்களையே அறிமுகம் செய்கின்றனர். ஒரு பெண் திருமணமானவர் என்பதை உணர்த்துவது அவர் கால் விரல்களில் அணிந்திருக்கும் மெட்டிதான். நெற்றி உச்சி வகிட்டில் பொட்டு வைத்திருப்பார். கழுத்தில் மாங்கல்யம், கால்களில் மெட்டி அணிவது கூட அடையாளம் என்பதை விட ஆரோக்கியம் உள்ளது என்பதை உணர்ந்துதான் அதை அணியச் சொல்கின்றனர். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி…

தங்கம் விலையில் ரூ.1,248 வீழ்ச்சி

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது ஏழை, எளிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு இறுதியில் ரூ.29 ஆயிரம் வரையிலேயே நீடித்து வந்த தங்கம் விலை, இந்த ஆண்டு ரூ.43 ஆயிரத்துக்கு மேல் எட்டியது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.156 குறைந்து, ரூ.4,766க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ. 1,248…

ரூ.39 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை எட்டியுள்ளது. பொது முடக்க நாட்களில் பொருளாதார சரிவு மற்றும் தங்கத்தின் வரத்து குறைவு காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது. சுமார் ரூ.43 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை, ரூ.50 ஆயிரம் வரை உயரும் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17…

ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,713க்கு விற்பனையாகிறது. பொருளாதார சரிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக பொது முடக்க காலத்தில் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது தான். ஊரடங்கு காலத்தில் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிக் கிடந்ததால் வெளிநாடுகளில் மக்கள் தங்கக் காசுகளில் முதலீடு செய்யத் தொடங்கினர். இது தங்க விலை உயர்வில் எதிரொலித்தது. அதன் பிறகு, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் பொருளாதார மந்த…

மீண்டும் உயரும் தங்கம் விலை

கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் தற்போது மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பொருளாதார சரிவுகள் ஏற்பட தொடங்கிய நிலையில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்ததால் தங்கம் விலை உயரத் தொடங்கியது கடந்த மாதத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை மெல்ல விலை குறைந்தது. தற்போது சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்து வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200…

தங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவிதம் வரை கடன்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணத்தால் வறுமையில் உள்ள ஏழை எளியவர்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை தங்க நகைகளை மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே வங்கிகளில் கடன் கொடுத்து வந்த நிலையில் இனி 90 சதவீதம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார் சாமானிய மக்கள் பெரும் தங்க நகைக்கடன்களில் தங்க நகையின் மதிப்பில் 90 சதவீதம்…

தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ. 792 உயர்ந்து ரூ.42,208க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் 42,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 42,000 ரூபாயைத் தாண்டி வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது தங்கம் விலை. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனாவால் சர்வதேச அரங்கில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் மஞ்சள் உலோகம் என்று அழைக்கப்படும் தங்கத்தில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக…

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு நீதிமன்றக் காவல்

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மீண்டும் எர்ணாகுளம் காக்கநாடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. என்ஐஏ நீதிமன்றம் காவல் விதித்ததால் ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் ஏறுமுகத்தில் தங்கம்

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.  இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.41,000க்கு விற்பனை ஆனது. வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஆனால், நேற்றியை விட இன்று இதன் விலை உயர்ந்து…

ரூ.38 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,736ரூபாயாக இருந்த நிலையில் இன்று 544 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது. மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,152 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது.