Browsing: GVM

விஜய் சேதுபதியுடன் இணையும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்

கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோருடன் ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்திருக்கிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம். காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் தொடர்பான செய்தி அண்மையில் வெளியானது. அப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,படத்தில் பணிபுரியும் இயக்குநர்கள் அனைவருமே தமிழ்த் திரையுலகை தங்கள் படைப்புகள் மூலம் ஒரு படி முன்னெடுத்துச் சென்றவர்கள். தங்களுக்கான தனி முத்திரையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களுடன்…

கமலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து 2006-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதனை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். இதன் படப்பிடிப்பை விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு…

கருத்துவேறுபாட்டில் கௌதம்மேனன் – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் இதன் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்புநடத்தவேண்டியிருக்கிறதுஇந்தப் படத்தின் டீசர் வெளியாகி சிறப்பானவரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘நான் உன் ஜோஷ்வா’ என்ற பாடல் காணொலி வடிவில் இன்று ஜூலை…

காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நானும் சூர்யாவும் தயார் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் வீட்டில் இருந்தபடியே விளம்பரப்படுத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது, ரசிகர் ஒருவர் ஜோதிகாவிடம் காக்க காக்க 2-ம் பாகம் உருவானால் சூர்யாவுடன் நடிப்பீர்களா? என கேட்டார். இதற்கு பதிலளித்த ஜோதிகா, ‘கவுதம் மேனன் காக்க காக்க 2 படத்திற்காக சுவாரஸ்யமான கதையுடன்…