Browsing: high court

நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கும் முன்பாக நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் சமீப காலமாக மதுரை உயர்நீதிமன்ற கிளை மக்களுக்கான பொது பிரச்சினைகள் குறித்த பல்வேறு வழக்குகளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று நில அபகரிப்பு வழக்கு விசாரணையில் கருத்து கூறிய மதுரை கிளை நீதிபதிகள் தரிசு…

வன்னியர் சங்கம் தடைசெய்யப்படுமா

வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி சென்னையிலுள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் அருகே பாமகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக தலைவர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பாமகவினரை சென்னைக்குள் நுழைய விடாமல் பெருங்களத்தூரிலேயே காவல் துறையினர் தடுத்தி நிறுத்தினர். இதனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாமகவினர், சாலையில்…

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை- உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்தியவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்வுகளை…

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கிரானைட் குவாரி முறைகேடு பற்றி விசாரனை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற சகாயம் ஐஏஎஸ் அவர்கள், மதுரை கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து விசாரனை நடத்தத் தொடங்கியது முதல், அவருக்கு பல்வேறு வகையில் மிரட்டல்களும், இடையூறுகளும் இருந்துவந்தன. இந்நிலையில், கடந்த அக்டோபர் 2-ஆம் நாள் அரசு பதவியிலிருந்து தாம் விருப்ப ஓய்வு பெறுவதாக தமிழக அரசுக்கு சகாயம் கடிதம் எழுதினார். அவரின்…

தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும்.

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த சூரியப்பிரகாசம் என்பவர் விவசாயிகளிடமிருந்து நெல்லை விரைவாக பெறுவதற்கு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். நெல்லை பாதுகாப்பதற்கான வசதிகளை செய்ய வேண்டும் என்று கோரி ஒரு மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்…

ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா – இன்று தீர்ப்பு

தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யகோரிய எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் இருந்து மக்களவைக்கு சென்றவர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் . இந்த தேர்தலில் ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரத்து 319 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர்…

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்ரமணியன் அமர்வு வழக்கை விசாரித்தது. பின்னர் இன்றைய விசாரணையின் முடிவில், இதுகுறித்து 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. முன்னதாக விவசாயிகளின் விளைபொருள்களுக்கு…

மணல் கடத்தல் வழக்குகளில் சம்பந்தபட்டவர்களுக்கு முன்ஜாமீன் இல்லை

மணல் கடத்தல் வழக்கில் சிக்குபவர்களுக்கு இனி முன்ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வழக்குகளில் ஜாமீன் அல்லது முன்ஜாமீன் கோரினால் அபராதத்துடன் எளிதில் கிடைத்து விடுகிறது என்பதால், மீண்டும் மணல் கடத்தல் நடைபெறுவது என்பது தொடர்கதையாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மணல் கடத்தல் வழக்கில் சிக்கிய 40 பேருக்கு முன்ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்…

நீட் தேர்வு நடைபெறுமா நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

கொரானா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதுபோலவே மே மாதம் நடத்தப்படும் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நீட் நுழைவுத் தேர்வு இதுவரை நடைபெறவில்லை. இதனிடையே ஜேஇஇ மெயின் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கும் என தேசிய தேர்வு முகமை ஜூலை 3ஆம் தேதி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு…

கொரோனா நிவாரண நிதி அளித்தவர்கள் விவரத்தை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா நிவாரணத்திற்கு நிதி அளித்தவர்கள் யார் யார்? எவ்வளவு நிதி பெறப்பட்டது என்கின்ற விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த கற்பகம் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கினை ஒரு பொதுநல வழக்காக தொடர்ந்திருந்தார். அதில் மற்ற மாநிலங்களில் எல்லாம் கொரோனா நிவாரண நிதி பெற்றவர்கள் பெயர்கள் பட்டியல், பயனாளிகள் யார்? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் இடம்பெற்றிருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இணையதளத்தில் எந்தவொரு விவரமும் இடம்பெறவில்லை…

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை – சென்னை ஐகோர்ட்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்க அரசு தடை விதித்தது. சமூக விலகலை பின்பற்றாமல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோன்று மதிமுக, காங்கிரஸ் தரப்பிலும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உணவுகளை வாங்க மக்கள் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம்…