Browsing: highcourt

வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை

தமிழ்நாட்டில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்த மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தற்போது தடுப்பூசி மருந்துகள் சப்ளை குறைந்த அளவில் உள்ளதாகவும், தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டது. மேலும், நீதிமன்ற…

நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கும் முன்பாக நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் சமீப காலமாக மதுரை உயர்நீதிமன்ற கிளை மக்களுக்கான பொது பிரச்சினைகள் குறித்த பல்வேறு வழக்குகளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று நில அபகரிப்பு வழக்கு விசாரணையில் கருத்து கூறிய மதுரை கிளை நீதிபதிகள் தரிசு…

இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் – ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!

கோவில் நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவோரை குறிப்பிடும் போது அதற்கு நிகராக தமிழ் திருமுறைகள் ஓதுவோரையும் குறிப்பிட வேண்டும். என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ்பெற்றது. 900 ஆண்டுகள் பழமையானது. கொங்கு மண்டலத்தின் பெருமையாக திகழும், இந்த…

வட்டிக்கு வட்டி வசூலிப்பதை அனுமதிக்ககூடாது- மதுரை உயர்நீதிமன்றம்

வங்கிக் கடன் தொகை வசூலிப்பதைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததை திரும்பப்பெறக் கோரிய வழக்கில், சிறு கடன்கள் வாங்கிய ஏழை மக்களிடம் வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படுவது நியாயமற்றது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள தனியார் வங்கியில் நீண்ட கால கடனாக 50 லட்சம் ரூபாய் மற்றும் வீட்டுக் கடனாக…

தமிழ் விருப்ப பாடம் என்பதை ஏற்க முடியாது-உயர் நீதிமன்றம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமாக கற்பிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தைச் சேர்ந்த மதுரை பொன்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், “கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கப்படுவதில்லை. ஆறாம் வகுப்பிற்கு மேல் வகுப்பிற்கு, 20 மாணவர்களுக்கு…

’மனுஸ்மிரிதி சட்ட புத்தகம் அல்ல’ – சென்னை உயர் நீதிமன்றம்

மனுஸ்மிருதி ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே படிக்க வேண்டிய ஒரு சட்ட புத்தகம் அல்ல. இது 2,000 ஆண்டுகள் பழமையான நூல். இதை விளக்க முடியும் என்ற, சென்னை உயர் நீதிமன்றம், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவனை நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்ய மறுத்துவிட்டது. “திருமாவளவன் மனுஸ்மிருதியை தனது வழியில் விளக்கியுள்ளார். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இங்கு அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது” என்று நீதிபதிகள் எம். சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா…

ரஜினிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ராகவேந்திரா மண்டபத்தின் சொத்து வரி வழக்கை வாபஸ் பெற ரஜினிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி ரூ.6 லட்சம் செலுத்துமாறு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் பொதுமுடக்க நாட்களில் மண்டபம் வாடகைக்கு விடப்படவில்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்யக்கோரி ரஜினி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த 23ம் தேதி சொத்துவரி குறித்து சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் அதற்கு எந்த வித பதிலும் வரவில்லை…

நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுமா- இன்று விசாரணைக்கு வரும் மனு

நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு ஆறு மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 4) விசாரணைக்கு வருகிறது. செட்ப்டம்பர் 1 முதல் 9 வரை ஜே.இ.இ. தேர்வுகள் என்றும், மருத்துவ இடங்களுக்கான நீட் செப்டம்பர் 13 ஆம் தேதி என்றும் தேசிய தேர்வுகள் முகமையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நாட்டில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.…

கொரானா தனியார் மருத்துவமனை கொள்ளை தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவித்து தனியார் மருத்துவமனை ஒன்று 8 லட்சம் ரூபாய் வசூலித்தது தொடர்பாகச் சுகாதாரத் துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் அதே வேளையில் மருத்துவமனைகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப் படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தமிழக அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயித்தது. இதில் அதிகபட்ச கட்டணமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த…

மக்களின் குரல் என்றும் வெல்லும் – ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல்

சென்னை ஐகோர்ட் ஸ்டெர்லைட் குறித்த தீர்ப்பை வழங்கியது என்பதும், அந்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு விதித்த தடை தொடரும் என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து தற்போது கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல்…

பெண்களுக்கு சம உரிமை சட்டத்துக்கு காரணம் கருணாநிதி – மு.க ஸ்டாலின்

பெண்களுக்கு எந்த நிலையிலும் சொத்துகளில் சம உரிமை வழங்கலாம் என்று தீர்ப்பு வந்துள்ள நிலையில், இதற்கு வழிகாட்டியாக இருந்தது திமுக தலைவர் கலைஞர் 1989ஆம் ஆண்டு இயற்றிய சட்டம்தான் என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை. மகளுக்கும் உண்டு என்று இந்து வாரிசு உரிமைச் சட்டத் திருத்தம் சம உரிமை வழங்குகிறது…

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்காதது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்காதது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதம் செய்கிறார் என்று உயர்நீதிமன்றம் கூறப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரும் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மகன் பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் விடுப்பு கோரி தாய் அறுபுதம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சிறையில் 50 கைதிகளுக்கு கொரோனா…