Browsing: hindi

ஹிந்தியால் தாய்மொழி அழியும் என்பதற்கு உதாரணமாய் ஒரு மொழி

அண்மையில் எனது நண்பரின் நிறுவனத்தில் ஒரு வடஇந்திய இளைஞர் பகுதி நேர வேலைக்கு வந்திருந்தார். பார்ப்பதற்கு பஞ்சாபியர் போல இருந்தார் . நீங்க இந்தியவா பாகிஸ்தான என்று கேட்டேன் . இந்தியா என்றார் . பஞ்சாபியர் என்றால் கொஞ்சம் பஞ்சாப் பிரச்சனை பற்றி வாயை கிளறலாமே என்று தங்களின் தாய் மொழி எது என்று கேட்டேன் . அதற்கு அவர் ஹிந்தி என்றார். தங்களின் மாநிலம் எதுவென்று கேட்டேன் . ஹரியானா என்றார் . எனக்கு மீண்டும்…

இந்தியை காப்பாற்றுவதை விட கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் – முக ஸ்டாலின்

அமித்ஷா பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா தனது ட்விட்டரில் இந்தி குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் “இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. அதன் அசல் தன்மையும் எளிமையும்தான் இந்தியின் பலமே! இந்தி மற்றும் பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே புதிய கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. மொழி, கலாச்சாரம் என்று இந்தியா வேறுப்பட்டிருந்தாலும் ஒட்டு மொத்த…

இந்தியாவை ஒன்றிணைப்பது இந்தி – அமித்ஷா

இந்தியாவை ஒன்றிணைக்கும் சக்தியாக இந்தி இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திக்கு 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அலுவல் மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதனை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் இந்தி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 14) உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி என்பது இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத பகுதியாகும். சுதந்திர போராட்ட காலத்தில் இருந்து…

தமிழ்நாடு இருமொழி கொள்கையை தொடரும்-கே.பி.அன்பழகன்

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டிலேயே புதிய கல்விக் கொள்கையை அமலுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.…

யுவன்சங்கர்ராஜா தொடங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம்

தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்து சமீப நாட்களாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் இந்தி திணிப்புக்கு எதிரான டி-ஷர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த டி-ஷர்ட் புகைப்படம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் திமுக எம்.பி கனிமொழி இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். அதுபோல 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஆடுகளம் படத்தை முடித்து கனடாவில் பிலிம் ஃபெஸ்டிவலில் கலந்து கொண்டு இந்தியாவுக்குத் திரும்பியபோது,…

ஆயுஷ் அமைச்சக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இந்தி தெரியவில்லை என்றால் ஆயுஷ் பயிற்சி வகுப்பு கூட்டத்திலிருந்து வெளியேறுங்கள் என்று கூறி தமிழக இயற்கை மருத்துவர்கள் அவமதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் காணொளி வாயிலாக நடைபெற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான வொர்ச்சிவல் பயிற்சி வகுப்புகளை இந்தியா முழுவதும் 400க்கும் மேற்பட்ட யோகா மாற்றும் இயற்கை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்திலிருந்து மட்டும் சுமார் 37…