Browsing: school

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. வெளியானது வழிகாட்டு நெறிமுறை

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும். அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாதி மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும். முதல் நாளில் 50% மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50% மாணவர்களும் மாறி மாறி…

பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு

நவம்பர் 16-ம் பள்ளிகள் திறக்கப்படாது எனவும், சூழ்நிலைகளைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பல்வேறு பொருட்களை வாங்க கடைவீதிகள் மற்றும்…

“பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு”

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மாணவர்களின் நலனில் அரசுக்கு அக்கறை இல்லையா என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்கிறது. அதன்படி தமிழகத்தில்…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி ரவிக்குமார, சீமான் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனாவின்…

பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிப் போகிறதா?

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி தமிழக அரசு அனுமதி அளித்தது. அதாவது 9 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதன் படி, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில்…

அக்.1 முதல் மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் – தமிழக அரசு

140க்கும் மேற்பட்ட நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கும் என்ற கேள்வி எழுப்பிய நிலையில் மாணவர்களுக்கு ஆன்லை வழி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள பள்ளிக்கு வரலாம் என அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறிது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பி, ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரு நாட்களுக்கு ஒருமுறை பள்ளிக்கு வரலாம். அரசு…

இணைய வழி கல்வி – தொடரும் தற்கொலைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி ,கல்லூரிகள் தொடர்ந்து ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் கைபேசி அல்லது மடிக்கணினியோ இல்லாத நிலையில் பெற்றோரிடம் அவற்றை வாங்கி தர சொல்லி கேட்கின்றனர். ஆனால் இந்த ஊரடங்கால், அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் பிழைப்பு என்று வாழும்…

கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

தமிழகத்தில் கணித ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு கணித ஆசிரியர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற 10 நாள் ஆன்லைன் சிறப்பு பயிற்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. முதுநிலை பட்டதாரி கணித ஆசிரியர்களுக்கு e – box நிறுவனம் சார்பில் ஆன்லைனில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கணித பாடத்தை மேலும் எளிதாக்கவும், ஆழமாக கற்பிக்கும் வகையிலும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கணிதம் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்காகவும்…

ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; வரும் 8-ம் தேதிக்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு திரும்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால…

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே எழுதலாம் – மனிதவளத்துறை

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் அந்தந்த ஊரிலேயே எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவளத்துறை தெரிவித்துள்ளது. சொந்த மாநிலத்தை விட்டு பிற மாநிலத்தில் இருக்கும் மாணவர்கள் அவர்கள் இருக்கும் ஊரிலேயே 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவளத்துறை அறிவித்துள்ளது.