Browsing: Sembarambakkam

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5000 கன அடி நீர் திறப்பு

நிவர் புயல் காரணமாக சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக முழுக்கொள்ளளவை எட்டும் நிலையை நோக்கி சென்றுகொண்டுள்ளது. இதனிடையே, மழை காரணமாக இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 999 கனஅடியாகவும் உயர்ந்தது. 24 அடி நீர்மட்டம் கொண்ட ஏரி, 22 அடியை எட்டியவுடன் நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 12 மணியளவில் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் 1500…

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: பார்வையிட செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்ததால் முன்னெச்சரிக்கையாக ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 28 அடி நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில் சூழ்நிலையைப் பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும். செம்பரம்பாக்கத்தில் மொத்தம் 19 மாதங்கள் உள்ள நிலையில் ஏழு மதகுகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் வாய்க்கால்…

‘செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் அச்சம் தேவையில்லை’ – அதிகாரிகள் தகவல்!

நிவர் புயலால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும் நிலையில், மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயல் நாளை அதிகாலை அல்லது நள்ளிரவு தான் கரையை கடக்கும் என்பதால், அதுவரை அதீத கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியும் தற்போது நிரம்பியுள்ளதால், இன்று பிற்பகல் செம்பரம்பாக்கம்…

விநாடிக்கு 1,000 கன அடி நீர்: நண்பகலில் திறக்கப்படும் செம்பரம்பாக்கம்

எதிர்ப்பார்த்தப்படியே, இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரமான 24 அடியாகும்.  இதனிடையே தற்போது நிவர் புயல் மாமல்லபுரம் – புதுச்சேரி அருகே அதிதீவிவ புயலாக கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளதால் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால்…

22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்

முழு கொள்ளளவு 24 அடி கொண்ட சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாக அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட வாய்ப்பு உள்ளது.மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 230 கனஅடியில் இருந்து 1,096 கனஅடியாக அதிகரித்துள்ளது. 24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கத்தில் 22 அடியை தாண்டினால் தண்ணீர் திறக்கப்படும். இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாக உள்ளது. மழை தொடர்ந்து…