Browsing: sleep

பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை

காவிய நாயகன்! பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை. நெடுந்தூரப் பயணங்களில் தூங்கித்தான் பொழுதைக் கழித்தாகவேண்டும். அலுவலகத்துக்குக் கிளம்பும் குட்டிப் பயணங்களில் சற்று அசந்தால், இறங்கவேண்டிய நிறுத்தம் தவறிவிடுமென்பதால் பெரும்பாலும் தூங்குவதில்லை. அதையும் மீறி தூக்கம் நம்மை அசைத்துப்பார்த்த தருணங்களும் உண்டு. பேருந்தில் தூங்கும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கும்பகர்ணனை சமீபத்தில்தான் பார்த்தேன். கோயம்பேட்டிலிருந்து ஆவடி செல்லும் பேருந்து. நெடுநெடுவென உயரம். ஆகப் பருமனான சோடாபுட்டிக் கண்ணாடி, காதில் ஹெட்போன். முன்னிருக்கையில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.…