Browsing: Stalin Complaint

திமுக எதிர்ப்பால் குப்பை கொட்டும் வரியை வாபஸ் பெற்றது மாநகராட்சி

திமுகவின் எதிர்ப்பை அடுத்து சென்னை மாநகராட்சியில் குப்பை கொட்டும் கட்டணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது. அதாவது குப்பை கொட்டுவதற்கு வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் உள்ள வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை குப்பை கொட்டுவதற்கான கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் அலுவலகங்கள் ரூபாய் 300 முதல் ரூபாய் 3000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். திருமண…

தேசிய கொடியை அவமதித்ததாக மு.க.ஸ்டாலின், எல்.முருகன் மீது புகார்

தேசிய கொடியை அவமதித்ததாக ஸ்டாலின், எல்.முருகன் ஆகியோர் மீது தனித் தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 74ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்றுகொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமரும், சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொடியேற்றிவைத்தனர். எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார். பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கொடியேற்றினார். இந்த நிலையில் தேசிய…