Browsing: tamil nadu

அதிகளவு வேலைவாய்ப்புள்ள மாநிலம் தமிழகம் – எடப்பாடி பழனிச்சாமி

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 27) மாலை நடைபெற்ற கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 207.56 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் 43.60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தார். பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர், “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவிலான…

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்!

தமிழகம்-புதுவை கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம்-புதுவை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். நாழி(17.07.2020) தமிழகம்-புதுவை கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், நீலகிரி,…

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் திடீர் நிறுத்தம்!

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. நகைக்கடனை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு செல்போன் மூலம் நேற்று ஒரு குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி அவர் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் மாநில தலைமை…

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:…

தூத்துக்குடியில் கடன் பிரச்னையில் 2 தலித்துகள் கொலை; 3 பேர் கைது

தூத்துக்குடியில் ரூ.40,000 கடனுக்காக வழங்கப்பட்ட சொத்து பத்திரத்தை திருப்பி தருவதில் ஏற்பட்ட பிரச்னையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மாமனார், மருமகன் 2 பேர்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி நசரேத் பகுதியில் பதற்றத்த ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி உடையார்குள்ம் காந்திநகரைச் சேர்ந்தவர் பலவேசம். அவருடைய மருமகன் ஆறுமுகனேரி மூலக்கரையைச் சேர்ந்த தங்கராஜ் (27). தலித் சமூகத்தைச் சேர்ந்த பலவேசம் வட்டிக்கு கடன் வழங்கும் பிறபடுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துராஜ் (40) என்பவரிடம் ரூ.40,000 கடன்…