Browsing: teachersday

ஆசிரியர் தினத்தை புனிதப்படுத்திய சாமிதுரை

நேற்றுஆசிரியர் தினம். பலரும் தங்கள் பள்ளியில் பயின்றபோது தங்களை வகுப்பில் கவர்ந்த ஆசிரியர்களைப் பற்றி பதிவிட்டார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதுதான் நமது சமூகத்தின் மதிப்பு மிகு வரிசை. சிலருக்கு இந்த வரிசையில் ஆசிரியர் முதலாவதாக வந்துவிடுவார். வகுப்பறையில் அறிவு விளக்கேற்றி வைக்கும் ஆசிரியர்களே நம் அனேகருக்கும் வாய்த்திருப்பர். ஆனால், தாய் தந்தை இழந்த ஒரு குழந்தைக்கு தாயுமாகி தந்தையுமாகி வளர்த்து ஆளாக்கி சடங்கு வரை செய்திருக்கும் ஆசிரியரைப் பற்றிக் கேள்விப்படும்போது கண்களுக்குள் ஈரம் உருவாகிறது…