Browsing: TNEB

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. வெளியானது வழிகாட்டு நெறிமுறை

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும். அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாதி மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும். முதல் நாளில் 50% மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50% மாணவர்களும் மாறி மாறி…

கரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் கண்டனத்திற்குரியது; மேலும் ஆறு மாதங்களுக்காவது சலுகை வழங்க வேண்டும்: ஸ்டாலின்

கரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் வசூலித்து நுகர்வோரைத் துன்பத்திற்கு ஆளாக்கி இருப்பது கண்டனத்திற்குரியது; முந்தைய மாத கட்டணங்களைப் “பேரிடர் நிவாரணமாக” அறிவித்து மேலும் ஆறு மாதங்களுக்காவது மின் கட்டண சலுகைகளை வழங்கிட வேண்டும்” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு” மின் கட்டணத் தொகை வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் “பகல் கொள்ளை”யாக மின் நுகர்வோர் அதிர்ச்சியடைந்து…

கொள்ளையடிக்கும் மின்வாரியம்- நடிகர் பிரசன்னா தாக்கு

நடிகர் பிரசன்னாவின் வீட்டுக்கு ரூ.70 ஆயிரம் மின்கட்டணம் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜனவரி மாதம் செலுத்தப்பட்ட தொகையை விட தற்போது பல மடங்கு உயர்ந்திருப்பதாக கூறும் அவர், பொதுமுடக்கத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், மின்சார வாரியம் தவணை முறையில் கட்டுவதற்கு அல்லது கணக்கீடு எடுக்காத மாதத்திற்கு மாற்று வழியை பின்பற்ற வேண்டும் என்கிறார். தன்னால் அந்த தொகையை கட்டிவிட முடியும். ஆனால் சாதாரண மக்களால் கட்ட முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் டிவிட்டரில்…