தடுப்பூசி போட்டிருக்கேன்… ஆனா போடல! – சோழராஜன்
சாமீ எனக்கொரூ உண்மை தெரிஞ்சாகனும்… ஆமா, சாமீ… 2021 ஏப்ரல் 14 ஆம் தேதி அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோழராஜனாகிய நானும் வெற்றி ஆகிய எனது மனைவியும் ஆதார் ஜெராக்ஸ் கொடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோம். அன்றைய நிலையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யவில்லை. ஊசிபோட்ட சிஸ்டர் எனது ஆதார் ஜெராக்ஸில் உள்ள பெயரை ஒரு நோட்டில் பதிவு செய்தார். முதல் ஊசி போட்டதற்கான தகவல் வந்தது. ஆனால், எனது பெயர் அ.சோழராஜன் என்பதற்கு பதிலாக…