Browsing: vijayabaskar

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திரு. மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம்…

இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 108 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,349-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் இதுவரை…

மருத்துவர்கள், செவிலியர்கள் என்று அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் – விஜயபாஸ்கர்

மருத்துவர்கள், செவிலியர்கள் என்று அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரையில் இதுவரை 4,534 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மதுரையில் மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா அதிகம் பரவாமல் சராசரி அளவில் வைத்துள்ளோம் – விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா அதிகம் பரவாமல் சராசரி அளவில் வைத்துள்ளோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு மாவட்டம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மேற்கொண்டார்.அப்போது அவர் அளித்த பேட்டி: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா தொற்று அதிகம் பரவாமல் ஒரே சராசரி அளவிலேயே இருக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் தேவையான படுக்கை…

சென்னை ஸ்டான்லி மருத்துமவமனையில் கொரோனா சோதனை கியாஸ்க் – அசத்தும் சுகாதாரத்துறை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருபவர்களை சோதனை செய்யும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கியாஸ்க் செயல்பாட்டினை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா சோதனையை எளிதாகவும் அதேசமயம் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள தனிநபர் பாதுகாப்பு உபகரணம் (PPE) தேவைப்படாத கியாஸ்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கியாஸ்க் முழுவதும் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனைக்குப்பிறகும், கையுறைகள், சானிடைசரின் உதவியுடன்…