Browsing: vijayakanth

பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா உறுதி!

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, அண்மையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தே.மு.தி.க பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் கரோனா இல்லை எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனித்து களமிறங்க விரும்பும் தேமுதிக

விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி இன்றுடன் (செப்டம்பர் 14) 15 ஆண்டுகள் முடிந்து 16 ஆம் ஆண்டு தொடங்குகிறது. அண்மையில் விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி மாவட்டச் செயலாளர்களுடன் காணொலியில் பேசிய பொருளாளர் பிரேமலதா, “தொண்டர்களும், நிர்வாகிகளும் தனித்து நிற்பதையே விரும்புகிறார்கள். நாம் வைத்த கூட்டணியால் நம்மை விட அவர்களே ஆதாயம் அடைந்திருக்கிறார்கள்”என்று அதிமுகவைத் தாக்கினார். பின், ‘மாற்று அரசியலை தேமுதிகவே முன்னெடுக்கும். பூனைக்கு மணி கட்டுவோம்’ என்றும் கூறினார் பிரேமலதா. இந்த சூழலில் தேமுதிகவின் 16…

10ம் வகுப்பு தேர்வு ரத்து என்பது காலம் கடந்து எடுத்த முடிவு என்றாலும் வரவேற்கிறோம்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

10ம் வகுப்பு தேர்வு ரத்து என்பது மிகவும் காலம் கடந்து எடுத்த முடிவு என்றாலும் வரவேற்கிறோம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது ஆபத்தான சூழலில் தேர்வு எழுத வேண்டுமா என அஞ்சிக் கொண்டிருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த நிம்மதியை அளித்திருக்கிறது. வைகோ (மதிமுக பொது செயலாளர்): அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நன்றி…