Browsing: Vijaykanth

விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இருவரும் மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செப்டம்பர் 23ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான…