Browsing: vikram

கோப்ரா படப்பிடிப்பு இடத்தை மாற்றிய தயாரிப்பாளர்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. விக்ரமின் 58 ஆவது படமான இதை,7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பின் கொரோனா காரணமாகத் தடைபட்டது.…

நடிகர் விக்ரம் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விக்ரம். இவர் சியான் விக்ரம் என்று தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுவார். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள விக்ரம்., இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படமென அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் தனது மகன் த்ருவுடன்…

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம்பிரபு

குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா.  அவற்றிற்கு அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அவர் விக்ரம்பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கார்த்தி மற்றும் விஷால் படங்கள் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதால் அதற்கு முன்னதாக விக்ரம்பிரபு படத்தைத் தொடங்கத் திட்டமிட்டி ருக்கிறாராம். இப்படம் முழுநீளத் திரைப்படம் என்றும் இணையதளத் தொடர் என்றும் இரு தகவல்கள் இருக்கின்றன. இப்படத்தைத் தயாரிப்பு சன் நிறுவனம் என்பதால் இரண்டுக்கும் வாய்ப்பு இருக்கின்றது. இணையதள நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு…