Browsing: virus

பாதிப்பில் தமிழகம் 7-வது இடம்; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000-ஐ நெருங்கியது…இதுவரை 934 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000-ஐ நெருங்கியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1543 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 934 பேர் உயிரிழந்த நிலையில், 6,868 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக…

தடுப்பூசியும் நானும்!

1964 டூ 1969 எனது ஆரம்பப் பள்ளிக் காலம்… அலங்காநல்லூரில் நான்காம் வகுப்பு கால் பரீட்சை வரைக்கும் படித்தேன்… அந்தக் காலகட்டத்தில்தான் பெரியம்மை தடுப்பு ஊசி, காலரா தடுப்பு ஊசி போடும் பணி தீவிராமாக இருந்தது. பள்ளிக்கூடத்துக்கே சுகாதாரத் துறை ஊழியர்கள் வந்து மாணவர்களுக்கு ஊசி போடுவார்கள். பள்ளிக்கூடமே மாணவர்களின் கதறல் ஒலியால் கிடுகிடுக்கும். ஏனெனில் அந்த ஊசி அவ்வளவு மொக்கடாசாக இருக்கும். இப்போ மாதிரி டிஸ்போசபிள் ஊசியெல்லாம் அப்போ கிடையாது. இரண்டே ஊசியைக் கொண்டு ஐந்து…

தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் கடைகளில் நாளை முதல் 1000 விநியோகம்

சென்னை: தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் நாளை முதல் 1000 மற்றும் ஒரு மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வருகிற 15ம் தேதி காலை 6 மணி வரை 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரிப்பு….பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இருந்து வந்தவர்கள் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக…

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

கடந்த டிசம்பர் இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சீனாவை பார்த்து மற்ற நாடுகள் உஷாராவதற்கு முன்பே வேகவேகமாக உலக நாடுகள் அனைத்திலும் வேகவேகமாக பரவியது கொரோனா. ஆரம்பத்தில் சீனா அதிக உயிரிழப்புகளை சந்தித்திருந்தாலும் அதை தாண்டி இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதிகமான உயிர்பலிகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் மூன்று மாத கால போராட்டத்திற்கு பிறகு சீனாவில் கொரோனா பரவுதல் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பூரண நலம்பெற்று திரும்பி வரும் நிலையில்,…