Browsing: Vivek

விவேக் நினைவாக…..

சின்னக் கலைவாணர் விவேக் மறைந்து ஒரு வாரத்திற்கு மேலாக்விட்டது. திரைத்துறை சார்பில் அவருக்கு நினைவஞ்சலிக் கூட்டமும் நடந்தது. ஆனால் மரங்களை நடுவதில் அதி தீவிரமாக இருந்த விவேக் இதுவரை தமிழகம் முழுவதும் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். மரங்கள் நடுவதற்காகவே பசுமை கலாம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்த விவேக் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரின் லட்சியத்தை நிறைவேற்றும் பணிகளில், விவேக்குடனேயே பதினைந்து வருடங்களுக்கும் மேலாக பயணித்த செல் முருகன் மற்றும் தயாரிப்பாளர்கள் லாரன்ஸ்,…

மனித நேயத்தை காப்போம் – நடிகர் விவேக் வேண்டுகோள்

நடிகர் விவேக் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மருத்துவர் ஒருவர் இறந்தால் கூட போலீஸ் பாதுகாப்போட அடக்கம் செய்ய வேண்டிய நிலை இன்னைக்கு இருக்கு. கோவிட் 19 நோய் தொற்று உள்ளவங்களுக்கு சிகிச்சை அளித்து, அதனால அவர் பாதிக்கப்பட்டு இறந்திருக்கார். அவர் உடலை அடக்கம் பண்ண மக்கள் தகராறு பண்றாங்க. ஏன்னா, தொற்று பரவிரும்னு பயப்படறாங்க. சில மருத்துவ உண்மைகள் புரியலைன்னு நினைக்கிறேன். கொரோனா வைரஸ் இறந்த உடல்ல இருக்காது.…