Browsing: World famous artists 1

உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் – 1.லியனார்டோ டா வின்ஸி

இவர் இத்தாலி நாட்டு ஓவியர். இவருடைய இளமைப் பருவம் சோகம் நிறைந்தது. அப்பாவின் பெயரை இனிஷியலாக போடக்கூட முடியாத நிலைமை. ஆம். இவருடைய அப்பா செர் பியெரோ, ஒரு வழக்கறிஞர். அவருடைய குடும்பத்துக்கு பெரிய பண்ணை இருந்தது. அந்தப் பண்ணையில் ஓய்வெடுக்க வருவார். அப்போது, அந்த பண்ணையில் வேலை செய்த காத்தரினா என்ற அழகிய பெண்ணை அவருக்குப் பிடித்திருந்தது. அந்த பெண்ணுடன் அவர் உறவு வைத்துக் கொண்டார். அதன் விளைவாக அந்த பெண் கர்ப்பமானார். இருவருக்கும் பிறந்தவர்தான்…