Browsing: yediyurappa

பி.எஸ். எடியூரப்பா ரொம்ப நாளைக்கு முதல்வர் பதவியில் இருக்க மாட்டார்

கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா நீண்ட காலம் அந்த பதவியில் இருக்க மாட்டார் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக முதல்வர் பதவியிலிருந்து பி.எஸ். எடியூரப்பா நீக்கப்படுவார் என ஒரு பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சில பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். இருந்தாலும் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவுக்கு எதிராக…

கர்னாடக முதல்வர் எடியூரப்பாவை மாற்ற தயாராகும் பாஜக

கொரோனா தொற்று சாதாரண மனிதர்கள் முதல் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் பெரும்புள்ளிகள் வரை பேதமின்றி தாக்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிப் பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்பி.க்கள், முதல்வர்கள், கவர்னர்கள் என்று பல விஐபிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் இதை வைத்து அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அம்மாநில பாஜகவின் உட்கட்சி அரசியலிலும், ஆட்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எடியூரப்பா கடந்த சில மாதங்களாகவே மாநில முதல்வர்…