1975 லேயே தமிழனுக்கு கம்யூட்டரை அறிமுகப்படுத்திய கலைஞர் – சாந்தி நாராயணன்

Share

முதன் முதலில் அவர் ஒரு கணினியைக் கண்டபோது, அதன் செயல்பாடுகள் பலன்களை எல்லாம் கேட்டுவிட்டு அருகில் இருந்தவரிடம்,

“எல்லாம் செய்யும் என்று சொல்கிறாயே , இந்த கம்ப்யூட்டர் கவிதை எழுதுமாய்யா” என்று நகைச்சுவையாகக் கேட்டிருக்கிறார்.

கம்ப்யூட்டர் இன்னும் கவிதை எழுதிவிடவில்லை. ஆனால், கணினித்துறையில் தமிழர்கள் பல வெற்றிச் சரித்திரங்களை எழுதியிருக்கிறார்கள்.

அந்த வெற்றிக்கதைகளில் எல்லாம் கலைஞர் இருக்கிறார்.

ஆம், இன்றைக்கு மென்பொருள் துறையில் அமெரிக்கா முதல் உலகெங்கும் பணிபுரிந்துகொண்டிருக்கிற ஒவ்வொரு தமிழர்களின் வெற்றிக்குப் பின்னாலும் கலைஞர் இருக்கிறார்.

அவர்களில் பெரும்பாலானோருக்கு தங்கள் வெற்றிக்கு அச்சாரமிட்டது கலைஞர் கருணாநிதி என்பதைக் குறித்து தெரியாமல் இருக்கலாம்.

இந்தியாவில் முதல்முறையாக 1975ல் கம்ப்யூட்டர் பற்றிய பாடத்தை பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியது, கலைஞர் தலைமையிலான அரசு.

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில், +1 +2 பாடத்திட்டத்தில், கணனி பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதை விருப்பப்பாடமாக தேர்வு செய்யும் திட்டத்தை ஏற்படுத்தியவரும் கலைஞர்தான்.

ஆண்டொன்றுக்கு 40 ஆயிரம் பேர், அரசுப்பள்ளிகளில் இருந்தே தொழில்நுட்ப பிரிவு வல்லுனர்களாகும் தரத்தோடு
உருவாகிறார்கள்.

1998-ம் ஆண்டு, அக்டோபர் 5-ம் நாள், தகவல் தொழில் நுட்பத்திற்கென்று தனி துறையை ,
ஏற்படுத்துகிறார்.

இந்திய துணைக்கண்டத்தில் முதல்முறையாக , தகவல் தொழில் நுட்பத்திற்கென ஒரு பாலிசி (டெபனிஷன்)
வரையறை செய்கிறார்.அது தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோரிடம் தமிழகத்தில் முதலீடு செய்கிற ஊக்கத்தைக் கொடுத்தது.

தமிழக இளைஞர்கள் அவர்களுடைய அறிவாற்றல், உழைப்பு இவைகளின் மீது கலைஞருக்கு இருந்த நம்பிக்கை
அட்டகாசமானது. நம் இளைஞர்களும் அதை பொய்யாக்கவில்லை. நிரூபித்தார்கள்.

இன்றைக்கு இந்தியாவிலே அதிகம் மென்பொருள் வல்லுநர்ககளை(சாப்ட்வேர் இன்ஜினியர்)தந்த மாநிலம் தமிழ்நாடு.

ஒரு புள்ளிவிவரம் கவனியுங்கள் 1998 செப்டம்பர் வரை, கொல்கொத்தாவில் இருந்து அமெரிக்க தூதரகம், 1,367 பேருக்கு விசா கொடுத்திருக்கிறது. டெல்லியில் இருந்து 5,460 பேருக்கு அமெரிக்க விசா கொடுக்கப்பட்டிருக்கிறது.
மும்பை யில் உள்ள அமெரிக்க தூதரகம் 9,734 பேருக்கு விசா கொடுத்திருக்கிறது.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து மட்டும் 21,371 பேர் விசா பெற்று அமெரிக்கவில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அதில் பெரும்பாலோனர் மென்பொருள் துறையை சார்ந்தவர்கள்.

oOo

2000 ம் ஆண்டில் சென்னை தரமணியில் டைடல் பார்க் உருவாக்குகிறார். சிறுசேரியில் உலகத்தரத்திலான தொழில்நுட்ப பூங்கா, இன்னைக்கு டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் போலோரிஸ் உள்பட உலகின் முன்னணி மென்பொருள் துறை நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை தருகின்றன. என்றால், அதன் மூல காரணம் கலைஞர்.

oOo

இங்கிலாந்தில் உள்ள வேர்ல்ட் டெல் நிறுவனத்தோடு இணைந்து தமிழ்நாடு முழுவதும், 13,000 சமுதாய இணைய மையங்களை அமைத்தவர், கலைஞர். ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

இப்படி, தகவல் தொழில் நுட்ப பிரிவில் மட்டும் கலைஞர் ஏற்படுத்திய முன்னோடித்திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

தகவல் தொழில் நுட்பத்துறையில் வாய்ப்புகளை பெற்று உயர்ந்துள்ள ஒவ்வொரு தமிழக இளைஞர்களுக்கும்
அவர்களின் தந்தை தாய்க்கு அடுத்து அவர்களை நம்பியது அவர்களுக்கான எதிர்காலத்தை கனவு கண்டது உழைத்தது கலைஞர் தான்.

oOo

அவர் இறந்துவிட்டாரா . மறைந்துபோனாரா என்றால் இல்லை, இல்லை.

அடுத்து இந்த தமிழக இளைஞர்களின் நலனுக்காக எதிர்காலத்துக்காக என்ன செய்யமுடியும் என்ன வேண்டும் என்று நெஞ்சார நினைக்கிற உழைக்கிற எவர் ஒருவருக்குக்குள்ளும் ஒரு கலைஞர் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்.

Leave A Reply