அப்பாவின் கனவு – Venkat Ramanujam

Share

உலகில் டாப் 100 மருத்துவக் கல்லூரி வரிசைகளில் 49வது இடம் வேலூர் கிறிஸ்டின் மருத்துவ கல்லூரி.. 64-வது இடம் சென்னை மருத்துவ கல்லூரி..

முதற்கண் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் அந்த இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கும்.. அந்த கல்லூரிகளில் ஆசிரிய பெருமக்களுக்கும்.. மற்றும் நிர்வாகிகளுக்கும்..

மேலே குறிபிட்ட செய்திகளை படித்த உடன் என் தந்தையை பற்றிய பழைய நினைவுகள் மனதில்..

சைதாப்பேட்டை மாடல் அரசு கார்ப்பரேஷன் பள்ளியில் (1960) படித்தவர் என் தந்தை சங்கர்ராம்.. பின்னர் மதுரை மருத்துவக் கல்லூரியில் MBBS மற்றும் MD (peaditrics) முடித்தார்..

அவர் காலத்தில் அவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்..

மேலும் சென்னை மருத்துவக் கல்லூரியில் DM neurology படித்தவர்.,

மருத்துவ கல்லூரியில் உதவிப் பேராசிரியர் ஆகவும் இருந்துள்ளார்..

அப்பா அவரின் ஆசிரியர் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி பற்றி மிக உயர்வாகப் பேசி பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன்..

என் தந்தையுடன் பிறந்தவர்கள் 14 பேர்.. அதில் என தந்தைதான் மூத்தவர்..

என் தந்தையின் பாட்டி பால் விற்று நெல்லையில் என் தாத்தாவை ( மதுரையில் பல்கலைக்கழகத்தில் முதல் Register ராமானுஜம்) படிக்க வைத்தவர் என சொல்லக் கேட்டிருக்கிறேன்..

என் அப்பா சங்கர்ராம் அரசுப் பணியில் 1968 ல் சேர்ந்த பின்தான் முதன்முதலாக அவர் சம்பளத்தில் அவர் பாட்டி வீட்டில் மின் இணைப்பைக் கொடுத்து லைட்டை போட்டதாக என் உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்..

ஏன் மருத்துவர்கள் ஆனீர்கள் என் தந்தையிடம் கேட்டபோது..

அவரின் ஐந்தாவது தம்பி உடல் நீலம் அடிக்கடி ஆகிவிடுவதால்.. அதற்கு மருத்துவம் அப்போது சென்னையில் ஸ்பென்சர் என்ற இடத்தில் தான் கிடைக்கும் என்பதால்..

அதை பெற சிறு குழந்தையான தனது 5வது தம்பியை தோளில் சுமந்த அப்பாவின் வயது 13 இருக்கும் காலத்தில்..

prescribe செய்த மருத்துவர் ஒருவரின் பேசிய சொற்கள் அவமானத்தில் உடம்பு கூசியது என சொல்லியவர் தானும் ஒரு மருத்துவராக ஆக வேண்டும் என அன்றைய தினத்தில் உறுதி கொண்டதாக தெரிவித்தார்..

ஆனால் அப்பா படித்ததோ கார்ப்பரேஷன் அரசு பள்ளியில்..ஆனாலும் அவமானம் தந்த வலியில் விடாமல் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்..

என் தந்தை மறைந்து பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன..

சிறு வயதில் அப்பா காலத்தில் அவருடன் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு சென்றும் உள்ளேன்..

சிறு வயதில் எதிர்க்கட்சியாக இருந்தபோது திருச்செந்தூர் வேல் திருட்டு கொலை வழக்கில் Kalaignar Karunanidhi நீதி கேட்டு மதுரையில் இருந்து நடைபயணமாக நடந்து திருநெல்வேலி வந்த போது மருத்துவராக அப்பா அங்கு சென்ற போது என்னையும் அழைத்து சென்றார்..

வெளியே காத்திருந்தேன்.. உள்ளே சென்று வந்தவர் உம்மென்று இருந்தார்..

காலில் புண் நடக்கணுமா என தனக்குள் முணுமுணுத்தார்..

நடந்து ஏன் வரணும்.. வண்டியிலே வரலாமே எனக் கேட்டபோது..

நொர்நாட்டியமா கேள்வி கேக்காதே என்று என்னை முறைத்து திட்டி விட்டு.

தொப்பி இடியட் என பொதுவெளியில் யாரையோ திட்டி விட்டு அவரின் பிரியமான lambertta TSA 0031 ஸ்கூட்டரை ஓங்கி மிதித்தார்..

அப்பா அந்த ஸ்கூட்டரை குழந்தை போல பார்த்து கொள்வார்..

அதுக்கு பெட்ரோல் எங்க வீடு சமதானபுரத்தில் இருந்தாலும் பல கிமீ தள்ளி இருக்கும் ரத்னா தியேட்டர் அருகே இருக்கும் TVS பாங்கில் மட்டுமே போடுவார்.

ஸ்கூட்டர் முகப்பில் இரண்டு சிங்கம் made of brass 2 இன்ச் சைஸில் இருக்கும் ..அதுக்கு Braso என்ற பவுடரை வாங்கி வைத்து இருப்பார்..

அந்த பவுடரை வைத்து தேய்த்தால் அது பளபள என மின்ணும் அந்த இரு சிங்கமும் அவருக்கு எப்போதும் பளபள என இருக்க வேண்டும் .. ஸ்கூட்டரை ஓங்கி மிதிக்காமல் மெதுவாகவே ஸ்டார்ட் செய்வார்..

பாளையங்கோட்டையில் தற்போது போலீஸ் கோட்ரஸ் இருக்கும் எதிரே இடத்தில் அப்பாவின் கிளினிக் அப்போது இருந்தது..

அப்பா திருநெல்வேலியில் கிளினிக் வைத்திருந்த காலத்தில் அஞ்சு ரூபாய்க்கு மேல வாங்க மாட்டார் நோயாளிகளிடம்..

மாலை நேரத்தில் சில சமயம் அங்கு நானும் என் தம்பியும் தான் receptionist / attender வேலையை பார்ப்போம்..

50 ரூபாய்க்கு மேலே வந்து விட்டால் போதும் கதவை சாத்து என்று சொல்லிவிடுவார்..
நான் போவதே கிளினிக் அருகிலிருக்கும் கடையில் மட்டன் சுக்கா சாப்பிடத்தான்.. கடை பெயர் மறந்துவிட்டது சுவை சான்ஸே இல்லை..

என் தம்பிக்கு பிடித்தது அருகில் உள்ள பேக்கரியில் கடையில் உள்ள ஐட்டம் மட்டுமே..

பின்னர் நான் ஏழாவது படிக்கும்போது அப்பாவுக்கு சென்னை மாற்றலாகி இங்கு வந்தோம்..

அதன்பின்னர் சென்னை வாசி தான்.. ராமகிருஷ்ண மிஷன் அரசு பள்ளியில் பத்தாவது வரை படித்தேன் பின்பு கில் ஆதர்ஷ் பள்ளியில் பிளஸ் டூ பின்னர் தியாகராஜர் பொறியியல் கல்லூரி மதுரை.. பின்னர் MBA சென்னை பல்கலைக்கழகத்தில் Distinction உடன் முடித்தேன்..

நான் பத்தாவது படிக்கும் காலத்தில் அயனாவரம் இஎஸ்ஐ superintendent in charge காலத்தில் அங்கு போலீஸ் நிலையம் திறக்க செய்தார்..

நோயாளிகளுக்கு வழங்கும் உணவினை அவர் சோதித்துப் பார்த்தபின் வழங்குவதை பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்..

தஞ்சாவூர் மருத்துவமனையில் இவர் காலத்துக்கு முன் இருந்த நடைபெற்ற பிணவறை ஊழல் முறையை கண்டுபிடித்து அதை தடுத்து நிறுத்தினார்.. பிணத்தை dispose பண்ண பணம் வாங்குற %^&*$ என உடன் இருப்பவரை அவர் திட்ட கேட்டிருகேன்..

இப்படி திருத்திக் கொண்டே இருந்தா எப்படி .. பல மாற்றங்கள் வரும் தானே.

அம்மாவோ நான் என் அக்கா தம்பி படிப்பு தடைப்படும் என்பதால் சென்னையிலே எஙகளுடன் இருக்க அப்பா மட்டும் பல ஊர்களுக்கு மாற்றாலாகி செல்வார்..

அவரின் சேவையை பாராட்டி மாலதீவுகளுக்கு இந்திய அரசின் deputation ஆக சென்றார்..

அங்கு 2 வருடம் இருந்த போது அப்போதைய மாலத்தீவு அதிபர் Abdul Gayoom க்கும் மருத்துவமும் செய்தார்..

அந்த சமயத்தில் அங்கு நானும் அப்பாவின் அழைப்பிலே சென்று வந்தேன்.. பின்னர் அம்மாவும் மாலத்தீவு சென்றார் 1999 ஆண்டிலே இது நடந்தது.. இணைக்கப்பட்ட படம் அப்போது எடுத்ததுதான்..

எங்கள் மூவரின் கல்யாணம் முடிந்த பின் 2001 ஆண்டில் தனது 53 வயதில் அம்மா மரணத்தை தழுவ..

பின்னர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை ஏற்ற அப்பா அங்கும் நோயாளிகளுக்கு அனுமதிக்கும் முறையில் சில மாற்றங்களை மற்றும் உணவுகளின் தரத்தை உறுதி செய்து பலரின் பாராட்டைப் பெற்றார்..

அப்பா ரிட்டயர்ட் ஆனா கடைசி நாளில் நானும் மனைவியும் சென்னையில் இருந்து அங்கு சென்றிருந்தோம். அப்போது பலர் அப்பாவை பாராட்டிப் பேச கேட்டிருக்கிறேன்..

சென்னையில் இருந்த காலத்தில் எல்லாம் Spastic society க்கு பல காலமாக இலவச சேவை செய்து வந்துள்ளார் அப்பா..

அப்பாவின் 2004ல் ஆண்டின் மறைவுக்கு பின்னர் அவரின் மருத்துவ சேவையைப் பாராட்டி இன்றும் மதுரை மருத்துவமனையில் pediatrics துறையில் அவர் படம் வைக்கப்பட்டுள்ளது.

நிற்க..

இந்த பிண்ணனியில் வந்தவன் என்ற முறையில்..

சிந்திப்போர் ஒன்றை அருள்கூர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்..

கடந்த 3 ஆண்டாக நிட் தேர்வு தரும் புள்ளி விவரத்தை ஆராய்ந்தால் அதில் அரசு மாணவர்களுக்கு முக்கியமாக ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியின் கனவை நீட் அறவே ஒழித்து விட்டதை யாவரும் காணலாம் ..

#neet is a devil that is going to cause rich and poor divid̀e in our society..

#நீட் இல்லாத நிலையில் தான் உலகத்தரத்தில் தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது என்பதனையும் யாவரும் மறுக்கலாகாது…

மொத்தமாக 80000 மருத்துவ சீட்டுகளை வைத்துக்கொண்டு ஆனால் ஏழரை லட்சம் பேர் தேர்வு என கூத்தை அடிக்கும் நீட் தேர்வு மையத்தை சிலர் விழுந்தடித்து ஆதரிப்பதன் காரணம்..

வருடந்தோறும் ரூ40000 கோடிகள் வருமானத்தைப் பெற போட்டி போடும் கோச்சிங் சென்டர் லாபி..
அதில் அரசு எத்தனை சதவீதம் கட்டிங் வாங்கியது என்பதை அரசின் மந்திரிகள் தான் அருள் கூர்ந்து விளக்க வேண்டும்..

நீட் மட்டுமே வேண்டுமென குதி குதிப்பவர்கள்..

80000 மருத்துவ சீட்டுகளுக்கு ஏன் 7.5 லட்சம் ரேங் பட்டியல் என தெரிவிக்க முடியுமா..

நீட்டுக்கு ஆதரவு கரம் நீட்டுவோர் மறைமுகமாக கோச்சிங் சென்டர் செல்வத்தில் கொழிக்கும் ஊழலுக்கு துணை போவது மட்டுமல்ல…

மறைமுகமாக பல சங்கரராமாக வந்து இருக்க வேண்டிய பல அனிதாக்களை அழித்துக் கொண்டு அவர்கள் வருவதையும் மறுக்க முடியுமா…

இன்று நான் என் அக்கா மற்றும் தம்பி எல்லோரும் பொருளாதார நிலையில் உயர்ந்து சொந்த வீடு கார் என செட்டிலாகி விட்டோம்..

13 வயதில் பண வசதி இல்லாத ஒருவன்.. அவமானத்தை தாங்கிய ஒருவன்..

அவனின் மருத்துவ கனவை சிதைக்க அன்று நீட் இல்லாத காரணத்தினால் மருத்துவன் ஆன நிஜத்தின் நேரடி சாட்சியே எங்களின் குடும்பத்தின் வாழ்வியல் முறை..

அதிகாரமிக்க ஒன்றிய அரசை 40000 கோடி வருமானத்தில் பண திமிங்கலங்களை..

#தமிழ்நாடு அரசின் முழு முயற்ச்சிக்கு நீட் எனும் மாய பிசாசை வேரோடு சாய்ப்பதே அறத்தின் பால் நிற்போர் செயலாக இருத்தல் முடியும்..

வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் சோலை அல்ல நீட் ஓழிப்பு…

மாறாக அது விஷ பாம்புகள் படமெடுத்து ஆடும் பாதை .. வருடம் தோறும் ரூ 40000 கோடி வருமானம் தரும் கல்வி வியாபாரிகளின் மனதைக் குளிர வைக்கும் வைர சுரங்கம்..

விடுவார்களா அவ்வளவு சுலபத்தில்..

ஆனாலும் சம உரிமை கோரி போராடும் யாவரும் கடவுள்களின் குழந்தைகள் தான்..

சம உரிமையற்ற காலத்தில் உழைக்கும் மக்கள் சார்ந்த தேவைகள் வெல்ல படுவதே அறமாகும் ..
பணமல்ல .. அதிகாரமல்ல…

மாறாக அறமே வென்றதாக புராண கதைகள் மட்டுமல்ல இனி வரும் காலங்களும் சொல்லும்..

அறமே வெல்லும்..

நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி 🙏

#சவெரா

படக்குறிப்பு : 1960 மாடல் அரசு பள்ளியில் இருந்து வெளி வந்த மாணவன்.. இந்திய அரசின் deputation ஆக 1999ல் மாலத்தீவு மருத்துவ சேவைக்கு சென்று .. பின் 2001ல் நாகப்பட்டினம் தலைமை மருத்துவரான உண்மைகளின் தொகுப்பு..

பதிவு குறிப்பு : நீட்டை நீக்க பாடு படும் நீதியரசர் ராஜன் குழுவுக்கு இது அனுப்பி வைக்கபட்டுள்ளது

Leave A Reply